வாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்த ஏர்டெலுக்கு அபராதம்!

வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கணக்கை தொடங்கியது.

புகழ் பெற்ற டெலிகாம் நிறுவனவமான ஏர்டெல்லுக்கு , ரிசர்வ் வங்கி  ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்ரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏர்டெல் நிறுவனம், பொதுமக்களிட்ம சிம்கார்டை விற்பனை செய்தபோது, ஆதரத்திற்காக அடையாள அட்டையை நகலாக பெற்றது. அதை வைத்து, வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கணக்கை தொடங்கியது.

தங்கள் பெயரில் ஏர்டெல் பேமெண்ட் உருவாக்கப்பட்டது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியாது. அரசின் மானியத்தொகை எந்தெந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்குகளில் சென்று சேர்கிறதோ அதை, தன்னுடைய பேபெண்ட் வங்கிக்கணக்குஏர்டெல் நிறுவனம் திருப்பிக் கொள்வது என நூதனமான மோசடியில் ஏர்டெல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அத்துடன், கேஒய்சி விதிமுறைகளையும் பின்பற்றி எந்தவிதமான கணக்குகளும் தொடங்காமல் இருந்துள்ளது. எனவே, இதன் காரணமாக த ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி பேமென்ட் வங்கிக் கணக்கு தொடங்கி, அவர்களுக்கு அரசு மானியத் தொகையை தனது கணக்குக்கு மாற்றி கையாடல் செய்த ஏர்டெல் நிறுவனத்தை ரிசர்வ் வங்கி கடுமையாக எச்சரித்துள்ளது.

இதுவரை ஏர்டெல் நிறுவனம், ரூ 47 கோடி வரை வாடிக்கையாளர்களுகு தெரியாமல் பணத்தை கையாடல் செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பாக விசாரணையை தொடக்கிய ரிசர்வ் வங்கி, ஏர்டெல் நிறுவனம் செய்த மோசடி செய்தக்தை உறுதி செய்துள்ளது.

×Close
×Close