Advertisment

FD திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல் பேங்க்… சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல லாபம்!

மெச்சூரிட்டிக்கு முன்பாக பணத்தை எடுப்பதற்கு எந்தவொரு அபராதமோ, பிராசஸிங் கட்டணமோ வசூலிக்கப்படாது. ஏர்டெல் ஃபிக்சட் டெப்பாசிட்டில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Airtel share today rate in BSE 17 August 2022

ஏர்டெல்

சேமிப்பு திட்டங்களில் ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஏனென்றால், FD பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி நல்ல வருமானமும் கிடைக்கக்கூடியது. பல வங்கிகளும், தபால் அலுவலகம் FD திட்டத்தில் நல்ல வட்டியை வழங்குகின்றன.

Advertisment

இந்நிலையில், ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்சட் டெப்பாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, இண்டஸ் இண்ட் வங்கியுடன் ஏர்டெல் பேமண்டஸ் வங்கி கூட்டணி அமைத்துள்ளது.

ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியில் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்சட் டெப்பாசிட் திட்டத்தில் 6.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. அதேநேரம், சீனியர் சிட்டிசன்களுக்கு அனைத்து FD திட்டங்களிலும் கூடுதலாக 0.5 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்கள், , 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு ஆகிய வெவ்வேறு ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம்.

இதுதவிர, FD திட்டம் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே, டெப்பாசிட் தொகையை திரும்பஎடுத்துக்கொள்ளும் வசதியையும் ஏர்டெல் வழங்கியுள்ளது. குறிப்பாக, மெச்சூரிட்டிக்கு முன்பாக பணத்தை எடுப்பதற்கு எந்தவொரு அபராதமோ, பிராசஸிங் கட்டணமோ வசூலிக்கப்படாது.

டெபாசிட் பணம் ஓரிரு நிமிடங்களில் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும் என ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி டிஜிட்டலில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி சேவை மையங்களை கொண்டுள்ளது. அதேபோல், இண்டஸ்இண்ட் வங்கிக்கு நாடு முழுவதும் 2103 கிளைகளும், 2,816 ஏடிஎம்-களும் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment