ஜியோ, பிஎஸ்என்எல் போட்டியை சமாளிக்க அதிரடியாக களமிறங்கியது ஏர்டெல்

ஏர்டெல் டிவி பிரீமியம் சேவையில் 350க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை வழங்குவதோடு மட்டுமல்லாது Zee5, Hooq உள்ளிட்ட பிரைம் சேவைகளையும் வழங்குகிறது.

airtel, jio, bsnl, recharge, internet, benefits, airtel tv premium, wynk music app, customers, ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், ரீசார்ஜ், இன்டர்நெட், பலன்கள், ஏர்டெல் டிவி பிரீமியம், வின்க் இசை, வாடிக்கையாளர்கள்
airtel, jio, bsnl, recharge, internet, benefits, airtel tv premium, wynk music app, customers, ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், ரீசார்ஜ், இன்டர்நெட், பலன்கள், ஏர்டெல் டிவி பிரீமியம், வின்க் இசை, வாடிக்கையாளர்கள்

ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் அளித்துவரும் அதிரடி சலுகைகளின் மூலமாக, ஏர்டெல் நிறுவனம், சமீபகாலமாக வாடிக்கையாளர்களை அதிகளவில் இழந்துவருகிறது. இதனை சரிகட்டும்பொருட்டு, ஏர்டெல் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவிக்க துவங்கியுள்ளது.

ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள், ரூ.1,699 ரீசார்ஜ் செய்வதன் மூலம், தினமும் 1 ஜிபி இன்டர்நெட், அளவில்லா அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் பயன்களை பெற்று வந்தனர். அதிக வாடிக்கையாளர்கள் இழப்பின் காரணமாக, ஏர்டெல் நிறுவனம், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு ரூ.1,699 ரீசார்ஜ் திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, ரூ.1,699 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1 ஜிபி இன்டர்நெட்டுக்கு பதிலாக 1.4 ஜிபி இன்டர்நெட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

கூடுதலாக 400 எம்பி இன்டர்நெட் வழங்குவதோடு மட்டுமல்லாது, ஏர்டெல் டிவி பிரீமியம் சேவையையும் இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் டிவி பிரீமியம் சேவையில் 350க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை வழங்குவதோடு மட்டுமல்லாது Zee5, Hooq உள்ளிட்ட பிரைம் சேவைகளையும் வழங்குகிறது. இதோடு நின்றுவிடாமல், ஓராண்டு கால அளவு கொண்ட நோர்டான் ஆன்டிவைரஸ் பேக் மற்றும் விஜ்க் இசைசேவையையும் வழங்குகிறது.

ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.499 பிளான் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக 400 எம்பி இன்டர்நெட் வழங்கப்பட உள்ளது. ரூ. 129 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வின்க் இலவச இசை சேவைக்கு பதிலாக, இலவசமாக காலர் டியூன் சேவை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel prepaid customers gets more benefits

Next Story
ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்பவரா? உங்களை கண்காணிக்க அரசு உத்தரவு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com