ஜியோவை தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் ரூ. 649 போஸ்ட் பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
டெலிகாம் சந்தையில் ஜியோ - ஏர்டெல் இந்த இரண்டு நிறுவனங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்து வருகிறது. அதிலையும் ஜியோ ஏர்டெல்லை முந்தும் அளவில் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களில் தொடர்ந்து சலுகளை வழங்கி வருகிறது.
சமீபத்தில், ஜியோவின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 1 வருடல் இலவச சேவையை வழங்குவதாக ஜியோ அறிவித்தது. இந்த அறிவிப்பினால் உற்சாகத்தில் குதித்த, வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு அறிப்பாக நேற்று ’ஜியோ கிரிக்கெட் பெளே அலாங்’ மற்றும் “ஜியோ தண் தானா லைவ்” என இரண்டு பரிசுப் போட்டியை அறிவித்தது.
இந்த போட்டியில் வெற்றி பெரும் வாடிக்கையாளர்களுக்கு கார்கள், வீடு ஆகியவையும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. சந்தையின் ஜியோவின் போட்டியை தற்போது சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ரூ. ரூ. 649 போஸ்ட் பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு, 30ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. இனிமேல் இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 50 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையையும் வழங்கப்படவுள்ளன.
ஏர்டெல்லை பொருத்தவரையில், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகளை அடிக்கடி மாற்றி அறிவிப்பது வழக்கம், ஏனெனில், மற்ற டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, வோடஃபோனைக் காட்டிலும் ஏர்டெல்லி போஸ்ட் பெய்ட் ரீசார்ஜ் சேவைகள் வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.