வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் நிறுவனம், ரூ 129 ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டாவில் புதிய மாற்றத்தை புகுத்தி அறிவித்துள்ளது.
டெலிகாம் சந்தையில், ஜியோ - ஏர்டெல் இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் போட்டி மோதல் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால். போட்டி மோதலில் இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு அள்ளித் தரும் சலுகைகள் ஏராளம். முதன் முதலில் ரீசார் திட்டத்தில் கேஷ்பேக் ஆஃபர் என்ற புதிய புரட்சியை செய்த ஜியோவைத் தொட்ர்ந்து ஏர்டெல் நிறுவனமும் கேஷ்பேக் சலுகையை அறிவித்தது.
அதன் பின்பு, டேட்டாவில் அதிகப்படியான வரம்புகள், நாள் ஒன்று தரும் ஜிபியின் அளவை அதிகப்படுத்துதல் என்ற முனைப்பில் இறங்கிய ஜியோவிற்கு ஆரம்ப வெற்றி. அதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதே வழியை பின் தொடர்ந்தது. அதன் பின்பு, டெலிகாம் சந்தையில் இருந்த ஏர்செல், ஐடியா நிறுவனங்கள் பின்வாங்க, இப்போது ஜியோ மற்றும் ஏர்டெல் மற்றும் முதல் இரண்டு இடங்களை பிடித்து வருகிறது.
அந்தவகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் ரூ. 129 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இனி வரும் காலங்களில் ஏர்டெல்லின் ரூ. 129 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டாவை உயர்த்தியுள்ளது.
முன்பு இதே திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்க்கள், அளவில்லாத காலிங் வசதியும் வழங்குவட்து குறிப்பிடத்தக்கது.