ஏர்டெல் அதிரடி: ரூ. 499 க்கு ரீசார்ஜ் செய்தால் 164ஜிபி டேட்டா!

தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம், ஜியோவிற்கு போட்டியாக ரூ. 499 ரீசார்ஜ் திட்டத்தில்  புதிய மாற்றத்தைக் கொண்டுள்ளது.

டெலிகாம் சந்தையில், ஜியோவிற்கும், ஏர்டெல்-க்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி  வருகிறது என்பது நாடு அறிந்த விஷயம். அதே சமயம் போட்டி முனைப்பில்  இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகள் ஏராளம்.

அந்த வகையில்,   சமீபத்தில் ஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை கொண்டு புதிய ரீசார்ஜ் சேவையை அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து,  தற்போது ஏர்டெல் நிறுவனமும், ரூ 499 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 164ஜிபி டேட்டாவை  வழங்குகிறது.

ஏர்டெல் அறிவித்திருக்கும் இந்த  ரூ.499 ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மொத்தம் 82 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 164 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதே போல், இந்த திட்டத்தில்,  வாடிக்கையாளர்களுக்கு  ஒரு ஜிபி டேட்டா ரூ.3க்கு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் அறிவித்திருக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் நாள் ஒன்றிற்கு 300 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவை மிஞ்சும் பயனர்களுக்கு வாய்ஸ் கால் கட்டணம் நிமிடத்திற்கு 30 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

×Close
×Close