ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம், ரூ. 49 பீரிப்பெய்ட் பிளானை அதிரடியாக மாற்றி புதிய சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
டெலிகாம் சந்தையில் ஜியோ – ஏர்டெல் இந்த இரண்டு நிறுவனங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலையும் ஜியோ ஏர்டெல்லை முந்தும் அளவில் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களில் தொடர்ந்து சலுகளை வழங்கி வருகிறது.இவர்களுக்கு இடையே உள்ள போட்டியில், வாடிக்கையாளர்கள் நல்ல பயனை பெற்று வருகின்றன.
ஜியோவின் வருகை பின்னர் சொல்லவே வேண்டாம். 2ஜி யூசர்கள் எல்லாம் 4ஜிக்கு மாறினார்கள். அத்துடன் ரீசார்ஜ் திட்டங்களில் கேஷ்பேக் ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், கூப்பன்கள் என ஜியோ அடுத்த பாய்ச்சலுக்கு பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர களத்தில் இறங்கியது.
அதன் பின்பு, ஏர்டெல்லில் இரு மடங்காக இருந்த ரீசார்ஜ் திட்டங்கள் விலைகள் பெருமளவில் குறைந்ததன. அப்போது அறிவிக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டத்தில் ஒன்று ரூ. 49 பீரிப்பெய்ட் பிளான் திட்டம். இதுநாள் வரை இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி, 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை மாற்றி அமைத்து அறிவித்துள்ளது. அதன்படி, இனி வரும் காலங்களில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 49 க்கு ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு, நாள் ஒன்று 3 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் புதிய ரூ.49 சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் செல்ல வேண்டும். இந்த சலுகையை டேட்டா பிரவில் காண முடியும். இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்த பின் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யலாம்.
ஏர்டெல்லின் இந்த புதிய திட்டம் ஜியோவின் ரூ. 49 ரீசார்ஜ் திட்டத்திற்கு போட்டியாக கொண்டு வரப்பட்டது. ஆனால், ஜியோவின் இந்த திட்டம் 28 நாட்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.