ஏர்டெல் மற்றும் ஜியோவின் தொடர் ஆஃபர்கள்: அசந்து நிற்கும் வாடிக்கையாளர்கள்!!!

முக்கியமான சில ரீசார்ஜ் திட்டங்களிலும் அதிரடியான ஆஃபர்களை அறிவித்துள்ளது.

முன்னணி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் தங்களின் முக்கிய ரீசார்ஜ் பிளான்களில் அதிரடியான ஆஃபர்களை அறிவித்துள்ளன.

டெலிகாம் சேவையில் ஜியோவின் வருகைக்கு பின்னர்,  இந்தியாவில் நடந்த மாற்றங்கள் ஏராளம்.  2ஜி வாடிக்கையாளர்கள்  அவ்வளவு எளிதாக 4ஜிக்கு மாறியததும் ஜியோவால் தான். ஜியோவுடன் போட்டி போட முடியாமல் பல நிறுவனங்கள் சந்தையில், தோல்வியை தழுவின.

அதன் பின்பு ஜியோ மற்றும் ஏர்டெல்  ஆகிய இரண்டு நிறுவனங்களும்  சந்தையில் நேரடியாக மோதிக் கொள்ள  ஆரம்பித்தன. இந்த போட்டியினால்  மக்கள் பெருமளவில் பயனடைந்தார்கள்.  கிஃபுட் வவுச்சர்கள்,  கேஸ்பேக் ஆஃபர்கள் என இரண்டு நிறுவனங்களும் மாறி மாறி சலுகைகளை அறிவித்தன.

இந்நிலையில், சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இரண்டு புது விதமான ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது,  முக்கியமான சில ரீசார்ஜ் திட்டங்களிலும் அதிரடியான ஆஃபர்களை அறிவித்துள்ளது.

 ரூ.349 ரீசார்ஜ் திட்டம்:

ஏர்டெல்லில் ரூ. 349 க்கு ரீசார்ஜ் செய்தால்,  வாடிக்கையாளர்களுக்கு அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவை,  நாள் ஒன்றூக்கு 100 எஸ் எம் எஸ்கள், 84 ஜிபி டேட்டா  வழங்கப்படுகின்றன. 28 நாட்கள்  செயல்படும் இந்த திட்டத்தில்   முன்பை விட தற்போது அதிகப்படியான ஜிபி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவில் ரூ. 349க்கு ரீசாஜ் செய்தால், அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவை, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்க்கள் மற்றும்  105 ஜிபி ஜிபி டேட்டா வழங்கப்படுகிறன. 70 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், முதலில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. தற்போது 1.5 ஜிபி டேட்டாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

×Close
×Close