வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
டெலிகாம் மார்க்கெட்டில் ஜியோ - எர்டெல் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. போட்டி முனைப்பில் இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருவது வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.
ரீசார்ஜ் திட்டங்களில் கூட புதிய புதிய மாற்றங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர பல்வேறு முயற்சிகளை இரண்டு நிறுவனங்களும் எடுத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் டேட்டா ஏதும் இல்லாமல் வெறு வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் -க்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ. 299 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் எல்லையற்ற வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா!!
இத்துடன் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 45 நாட்கள் மட்டுமே செயல்படும் இந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஏர்டெல்லின் ரூ. 299 மற்றொரு பீரிப்பெய்ட் ரீசார்ஜ் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.