அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகளில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வார்கள். தற்போது, ஓலா நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கியுள்ளது.
அந்த வகையில், அட்சய திருதியை முன்னிட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பாக 72 மணி நேரத்திற்கு வரையறுக்கப்பட்ட கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரத்தியேக தள்ளுபடிகள், நீட்டிக்கப்பட்ட ஆஃபர்கள் மற்றும் குறிப்பிட்ட ஷோரூம்களில் ஒரே நாளில் ஸ்கூட்டர் டெலிவரி போன்றவை வழங்கப்படுகிறது.
எனவே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சலுகைகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, ஜெனரல் 2 மற்றும் ஜெனரல் 3 மாடல்களை உள்ளடக்கிய எஸ் 1 போர்ட்ஃபோலியோவில் ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜெனரல் 2 ஸ்கூட்டர்களின் அடிப்படை விலை ரூ. 67,499 எனவும், ஜெனரல் 3 ஸ்கூட்டர்களுக்கான அடிப்படை விலை ரூ. 73,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் 2 செக்மெண்டில் எஸ்1-எக்ஸ் போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. 2kWh, 3kWh மற்றும் 4kWh திறன் கொண்ட ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ.67,499, ரூ.83,999 மற்றும் ரூ.90,999 விலை என்று விற்பனையாகிறது. இது தவிர எஸ்1 ப்ரோ மாடல்களின் விலை ரூ. 1,11,999-ல் இருந்து தொடங்குகிறது.
ஜெனரல் 3 செக்மெண்டில் 5.3kWh மற்றும் 4kWh திறன் கொண்ட பேட்டரி மாடல்களுடன் எஸ்1 ப்ரோ+ மாடல் விற்பனை ஆகிறது. இவற்றின் விலை ரூ.1,88,200 மற்றும் ரூ.1,48,999 என்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எஸ் 1 எக்ஸ் மாடல் ரூ.73,999-ல் இருந்து விற்பனையாகிறது. எஸ்1 எக்ஸ்+ என்ற மாடலின் விலை ரூ. ரூ.1,09,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பெங்களூருவில் மட்டும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒரே நாளில் பதிவு செய்து, டெலிவரி எடுக்கும் வசதியும் அட்சயை திருதியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இச்சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.