Wine rate in Goa : மனிதர்களால் நீண்ட காலமாக பருகப்பட்டு வரும் மதுபான வகைகளில் பீர் எனப்படும் சரக்குக்கு முக்கிய இடம் உண்டு. இந்தப் பட்டியலில் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், ஓட்கா, வைன் ஆகியவை வருகின்றன.
இவைகளுடன் ஒப்பிடுகையில் பீரில் குறைந்த சதவீதமே ஆல்கஹால் கலந்துள்ளதால் உடலுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை என்று பலரும் நம்புகின்றனர்.
அதேபோல் வெயில் நேரத்தில் உடல் சூட்டை தணிக்கும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றர்.
அதேபோல், மிதமான அளவில் பீர் குடிப்பதால் இதயத்துக்கு நல்லது என்று ஆய்வு முடிவுகள் கூறுவதாக சமூகத்தில் பரவியுள்ள செய்திகளையும் மறுக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்தியாவிலேயே குறைந்த விலையில் மது விற்பனையாகும் இடம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தியாவிலேயே கோவாவில்தான் மிக மிக குறைந்த விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு அடுத்த இடத்தில் புதுச்சேரி உள்ளது. அந்த வகையில் கோவாவில், ரூ. 100-க்கு விற்பனையாகும் மது பாட்டில் டெல்லியில் ரூ. 134 க்கும், கர்நாடகாவில் ரூ. 513-க்கும் விற்பனை செய்யப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“