Advertisment

ITR Filing: முற்றிலும் இலவசம்; SBI கொடுத்த சூப்பர் ஆஃபர்!

எஸ்பிஐ வங்கி மூலம் வருமான வரியை இலவசமாக தாக்கல் செய்யும் முறையை இத்தொகுப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
ITR Filing: முற்றிலும் இலவசம்; SBI கொடுத்த சூப்பர் ஆஃபர்!

எஸ்பிஐ வங்கி, வரி செலுத்துவோருக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, வரி செலுத்துவோர் இலவசமாக வருமான வரி வருமானத்தை (ஐடிஆர்) தாக்கல் செய்ய முடியும். இதனை தாக்கல் செய்திட, வரி செலுத்துவோருக்கு சில ஆவணங்கள் கண்டிப்பாக தேவை. அவர்கள், பான் கார்ட், ஆதார் கார்ட்,படிவம் -16, வரி விலக்கு விவரங்கள், வருமான வட்டி சான்றிதழ்கள் மற்றும் வரி சேமிப்புக்கான முதலீட்டுச் சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.வருமான வரியை இலவசமாகத் தாக்கல் செய்யும் முறையை இத்தொகுப்பில் காணலாம்.

Advertisment


இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில், வருமான வரியை  YONO செயலியில் Tax2win-வுடன் இணைந்து இலவசமாக தாக்கல் செய்யலாம். அதற்கு 5 ஆவணங்கள் மட்டுமே தேவை என பதிவிட்டுள்ளது.


மேலும், வரி செலுத்துவோர் eCA உதவியை ரூபாய் 199 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபர் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிசெலுத்துவோர் முதலில் Yono SBI பக்கத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, Shop and Order-ஐ கிளிக் செய்து,  Tax and Investment and Tax2Win ஆப்ஷனை கிளிக் செய்து தாக்கல் செய்து கொள்ளலாம்.
கொரோனா தொற்று காரணமாகவும், வெப்சைட்டின் சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் தனிநபர் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி நீட்டித்து கடந்தமாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. 
முன்னதாக செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் வருமான வரி தாக்கல் கால அவகாசம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிடிஐ அறிக்கையின்படி, பொதுவாக, தனிநபர் வரி செலுத்துவோருக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Income Tax Return Filing Sbi Bank Update Sbi Bank Sbi Yono App Itr Filling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment