/tamil-ie/media/media_files/uploads/2021/10/aadhar-759.jpg)
ஆதார் அடையாள அட்டை, இன்று அனைத்துவிதமான அரசு நலத்திட்டங்கள், உதவிகள், சிம்கார்ட்கள், கேஸ் இணைப்பு, வங்கிக் கணக்குகள் தொடங்க என அனைத்திற்கும் தேவைப்படும் ஒன்றாகும். பெரும்பாலான நேரங்களில் ஆதார் அட்டையை நம்முடன் வைத்திருக்க மாட்டோம். அச்சமயங்களில், செல்போனில் இ ஆதார் அட்டையை காண்பிப்போம். ஆனால், அவற்றை எந்த இடங்களில் பயன்படுத்தலாம் என்ற சந்தேகங்கள் பரவலாக உள்ளது.
இ ஆதார் அட்டை எந்தளவு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என கேள்வி எழுகிறது. அத்தகையை மொத்த சந்தேகங்களுக்கும், இச்செய்தி தொகுப்பில் விடையைத் தெரிந்துகொள்ளுங்கள்
UIDAI தளத்தின் அறிவிப்பின்படி, இ ஆதார் அட்டைக்கும் ஒரிஜினல் ஆதார் அட்டைக்கான சமமான அங்கீகாரம் உண்டு. அவற்றை ஆன்லைனில் டவுன்லோடு செய்வதால், இ-ஆதார் அட்டை என அழைக்கிறோம். ஆதார் அட்டையை டவுன்லோடு செய்ய விரும்புவோர் https://uidai.gov.in/ அல்லது https://eaadhaar.uidai.gov.in ஆகிய லிங்குகளை கிளிக் செய்து அப்ளை செய்துகொள்ளலாம்.
இ-ஆதார் அட்டை அனைத்து விதமான பணிகளுக்கும் உபயோகிக்கலாம். இருப்பினும், இ ஆதாரின் வெலிடிட்டி சந்தேகங்களுக்கு இந்த https://uidai.gov.in/images/uidai லிங்க்கிற்கு சென்று e aadhar validity பிடிஎஃப் பைலை பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் ஆதார் அட்டையைப் பெற விரும்பினால், உங்களின் ஆதார் எண்ணும், அதில் பதிவு செய்துள்ள மொபைல் நம்பரும் அவசியமாகும்.
முதலில் நீங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். பின்னர், பெயர் மற்றும் பின்கோடை குறிப்பிட வேண்டும். இதற்கிடையில், உங்களது செல்போன் எண்ணுக்கு ஓடிபி நம்பர் வரும். அதனையும், தளத்தில் பதிவிட்டு சப்மிட் கொடுத்தால் போதும், உங்களது இ ஆதார் அட்டையை எளிதில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.