அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கும் வேலைகள் நடைபெற்றுவருவதால், இந்தியன் வங்கி இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யுபிஐ, ஏடிஎம் ஆகிய சேவைகள் 15/02/2021 09:00 மணி வரை கிடைக்காது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த சிரமத்திற்கு மன்னிக்கவும் என இந்தியன் வங்கி தெரிவித்தது.
மேலும், அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள், ஒருங்கிணைப்புக்குப் பிறகு இந்தியன் வங்கி இணைய முகவரி மூலம் தான் இன்டர்நெட் பேங்கிங் செய்ய முடியும். இந்த,சேவையும் 15/02/2021 09:00 மணி வரை கிடைக்காது.
அதேபோன்று, அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் INDOASIS என்ற மொபைல் செயலியை பதிவிறக்கும் செய்ய வேண்டும்.
முன்னதாக, 10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத் துறை வங்கிகளாகப் பெரும் இணைப்பு செய்வதற்குப் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இண்டியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும்,
சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும்,
ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இண்டியாவுடனும்,
அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதியில் இருந்து இந்த இணைப்பு அமலுக்கு வந்தது. முந்தைய அலகாபாத் ஆன்லைன் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் செயலி கடந்த 12ம் தேதி முதல் செயலிழந்தது. பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் அலகாபாத் பொதுத்துறை வங்கி முழுமையாக இந்தியன் வங்கியுடன் ஒருங்கிணைந்து விடும்.
3 தலைமுறையினரும் பணத்தை சேமிக்கலாம்…வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook