Advertisment

Amazon Great Indian Festival Sale 2018: அமேசானின் கிரேட் இந்தியன் சேல் ஆரம்பம்!

Amazon Great Indian Festival Sale start from October 10, 2018: வீட்டுக்கு தேவையான உபகரணங்கள் 4 மடங்கு அதிகம் விற்பனை செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amazon Great Indian Festival

Amazon Great Indian Festival

Amazon Great Indian Festival Sale 2018 :ஆன்லைன் ஷாப்பிங்கில்  தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள  அமேசான் நிறுவனத்தில்  “கிரேட் இண்டியன் பெஸ்டிவல்” நாளை முதல் ஆரம்பமாகிறது.  அக்டோபர் 10  முதல் ஆரம்பமாகி  15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Advertisment

ஆன்லைன் வணிகதளமான அமேசானின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அமேசானின் தள்ளுபடி விற்பனையானது அந்நிறுவனத்தின் சிறந்த விற்பனயாக அமைந்தது.

அமேசானின்  வாடிக்கையாளர்களால் அதிகம் உற்று நோக்கப்படும் கிரேட் இந்திய வெஸ்டிவல் சேல்  இந்தாண்டும் அடுத்தடுத்த மகிழ்ச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு தரவுள்ளது.  இந்நிலையில்   “கிரேட் இண்டியன் பெஸ்டிவல்” மூலம் 10 கோடிக்கும் அதிகமான பொருட்களைக் கொண்டு, தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ள அமேசான் நிறுவனம். இந்த தள்ளுபடி விற்பனையில் சிட்டி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோல, அமேசான் பே-பேலன்ஸ் மூலமாக ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீத தொகை திரும்ப கிடைக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசானின் பிரைம் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே, அதாவது, அக்டோபர் 9 தேதி இரவே இந்த கிரேட் இந்தியன் செலில் பங்குப்பெறலாம்.

Amazon Great Indian Festival Sale 2018 : தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகுங்குகள்!

சாம்சங், சோனி, எச்.பி, எல்.ஜி, நோக்கியா மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ‘பிக்-டீல்ஸ்’ உள்ளதாம். குறிப்பிடும்படியாக, ப்ரொமோஷன் பேனரில் ஜபோன், ஒன் ப்ளஸ், டெல், ஹானர், விவோ, ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களை மேலும் கவரும் வகையில், நோ-காஸ்ட் இ.எம்.ஐ, எக்ஸ்சேன்ஞ் ஆஃபர் உள்ளது எனவும் அமேசான் தெரிவித்துள்ளது.

முன்னதாக நடைபெற்ற அமேசான் தள்ளுபடி விற்பனையின்போது, ஸ்மார்ட்போன்ஸ் மற்றும் வீட்டுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை அதிகளவு சேல்ஸ் ஆனதாம். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 2.5 மடங்கு அதிக ஸ்மார்ட்போன்ஸ் மற்றும் வீட்டுக்கு தேவையான உபகரணங்கள் 4 மடங்கு அதிகம் விற்பனை செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாம். எனவே, தீபாவளி பண்டிகையை கொண்டாட, வாடிக்கையாளர்கள் தயாராக இருங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment