ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு வலை வீசும் அமேசான்!!!!

எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற பழமொழி எல்லாருக்கும் தெரியும்.

ஆன்லைன் ஷாப்பிங்கில், முன்னணி நிறுவனமாக திகழும் அமேசான், தனக்கு போட்டியாக உள்ள ஃப்ளிஃப்கார்ட்டை வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

”எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற பழமொழி எல்லாருக்கும் தெரியும்.  இதன் அர்த்தத்தை நன்கு புரிந்துக் கொண்ட அமேசான்  நிறுவனம், தற்போது செயலில் இறங்கியுள்ளது.  இதன்படி, சந்தையில் தனது நிறுவனத்திற்கு கடும்  போட்டியாக நிலவும் ஃப்ளிப்கார்ரின்  இரண்டாம் கட்ட பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

அமேசானின் இந்த திட்டத்தால், பிளிப் கார்ட்டில் முதலீடு  வால்மார்ட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான, அமேசான் ஆன்லைன் விற்பனையில் முன்னோடியாக திகழ்கிறது. கடந்த் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம், 32,295 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில், அமேசான் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் கடுமையாக போட்டியை ஏற்படுத்தி வரும், வால்மார்ட் நிறுவனம் கூச்டிய விரைவில் மற்றொரு ஆன்லைன் வர்த்தக ஃப்ளிப் கார்ட் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்குவதற்காக பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு வந்தது.

இதை கேள்விப்பட்ட அமேசான் நிறுவனமும் தற்போது களத்தில் குதித்துள்ளது. இதன்படி, பிளிப் கார்ட் பங்குகளை வைத்துள்ள இரண்டாம் நபர்களிடம் இருந்து அதனை வாங்க தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை கட்டுப்படுத்தவும் அமேசான் திட்டம் தீட்டியுள்ளது.

இதனால், வால்மார்ட்டின் திட்டம்  பகல் கனவாக மாறியுள்ளது. இருப்பினும்,  பிளிப் கார்ட் மூலம் பல சரக்கு பொருட்களை விற்பனை செய்யவும் வால்மார்ட் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

×Close
×Close