அமேசான் ப்ரைம் அதிரடி சேல்: நம்ப முடியாத ஆஃபர்கள்!

Amazon.in Prime Day Sale India 2018: மொபைல் நிறுவனங்களான சாம்சங்,ஜியோமி, ரெட்மீ, மோட்டோ போன்ற ஃபோன்களின் விலையும் குறைக்கப்பட்டு ஆஃபரில் விற்பனை செய்யப்பட...

Amazon.in Prime Day Sale India 2018: வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த ’அமேசான் ப்ரைம் டே சேல்’ இன்று மதியம் 12 மணி முதல் ஆரம்பமாகிறது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் அமேசான் நிறுவனம் தனது ‘அமேசான் ப்ரைம் டே சேல்” குறித்த அறிவிப்பை வெளியிட்டு வாடிக்கையாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிரடி விற்பனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளன.சர்வதேச பிராண்டுகள் மற்றும் சர்வதேச விற்பனையாளர்கள் அமேசான் பிரைம் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவில் இரண்டாவது முறையாக நடைபெறு இந்த ப்ரைம் தின விற்பனையில் இந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்ப்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று (16.7.18) மதியம் 12 மணி முதல், அடுத்த நாள் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும் இந்த ப்ரைம் தின விற்பனையில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் அமேசான் ப்ரைம் ஒரு மாத சந்தாவை அறிமுகம் செய்தது.

அமேசானின் இந்த அதிரடி ப்ரைம் சேலில் ஒன்ப்ளஸ், சென்ஹெய்சர், WD, காட்ரேஜ், க்ளவுட் வாக்கர், சீகேட், சாம்சங் ஆகிய நிறுவனங்களில் இருந்து புதிய வரவுகள் விற்பனைக்கு வர உள்ளன. ‘அமேசான் இந்தியா ஆப் ஒன்லி’ போட்டியின் மூலம் கலந்து கொள்பவர்கள், ஒன்ப்ளஸ் 6 போன் வெல்லும் வாய்ப்புகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ப்ரைம் தின விற்பனையில், எச்டிஎப்சி வங்கி கார்டுகளில், இஎம்ஐ அல்லது அமேசான் பே பரிவர்தனையில் 10% பணம் திரும்ப அளிக்கப்பட உள்ளது. பிரபல மொபைல் நிறுவனங்களான சாம்சங்,ஜியோமி, ரெட்மீ, மோட்டோ போன்ற ஃபோன்களின் விலையும் குறைக்கப்பட்டு ஆஃபரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. கூடவே கேஷ்பேக் சலுகையும் உண்டு.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close