/tamil-ie/media/media_files/uploads/2018/06/Amazon-Prime-Membership-for-a-Month.jpg)
Amazon Prime Membership for a Month
அமேசான் இந்தியா முதன்முறையாக தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர சேவையில் அமேசான் பிரைம் மெம்பெர்ஷிப்பை வழங்கியிருக்கின்றது. தற்போது அமேசான் வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கான மெம்பெர்ஷிப் அல்லது மாதாந்திர மெம்பர்ஷிப்பினை அவர்களின் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒரு வருடத்திற்கான திட்டம் ரூ. 999 மட்டுமே ஆனால் மாதாந்திர சேவையை கணக்கில் கொண்டால் ஒரு ஆண்டிற்கு ரூ. 1548 கட்டவேண்டியது இருக்க வேண்டும்.
யாரெல்லாம் மாதாந்திர பிரைம் சேவைகளை பெற விரும்புகின்றார்களோ அவர்கள் முதலில் அமேசான் இணையத்தில் இருக்கும் மெம்பர்ஷிப் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு தேவையான மெம்பர்ஷிப்பினை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தேர்ந்தெடுத்தப் பின்னர், அதற்கான கட்டணத்தொகையை திருப்பிச் செலுத்தும் முறைகள் இருக்கும். கிரெடிட் அல்லது டெபிட் கார்டினை பயன்படுத்தி பணம் கட்டியபின்னர், அச்சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். அவர்களுடைய பிரைம் மெம்பர்ஷிப் தானாக அப்டேட் ஆகிக் கொள்ளும். ஒவ்வொரு மாத முடிவிற்கும் மூன்று நாட்களுக்கு முன்பு அமேசான் வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிக்கேஷன் அனுப்பும்.
சாதாரண வாடிக்கையாளர்கள் பெற இயலாத எண்ணற்ற சேவையினை அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மூலமாக வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் டெலிவரி, ஃப்ரீ டெலிவரி ஆகியவை மிக முக்கியமான சிறப்பு சேவைகள் ஆகும். மேலும் பிரைம் வீடியோ மற்றும் மியூசிக் மூலமாக எண்ணற்ற படங்கள் மற்றும் பாடல்களை பிரைம் மெம்பர்கள் கண்டு மகிழலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.