அமேஸான் இருக்க பயமேன்! இந்த அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுங்கள் ஆன்லைனில்!

Amazon.com and corona lockdown: குறைந்த அளவு முன்னுரிமை கொடுக்கக்கூடிய பிரிவுகளில் உள்ள பொருட்களுக்கான ஆர்டரை இப்போது எடுப்பதில்லை.

By: Published: March 27, 2020, 8:27:22 PM

Amazon latest news in tamil: நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்வதற்கு அதிக முன்னுரிமைக் வழங்கப்படும் என பிரதம மந்திரி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது உறுதியாக கூறினார். எனவே அடுத்து வரும் 21 நாட்களில் மக்கள் வீடுகளில் தங்கி இருக்கும் போது அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்ய தனியார் நிறுவனங்கள் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். அத்தகைய ஒரு நடவடிக்கையை மிகப்பெரிய e-commerce நிறுவனமான அமேசான் எடுத்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் 5 பிரிவுகளின் கீழ் உள்ள பொருட்களை வழங்கப் போகிறது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் இந்த பிரிவுகளின் கீழ் உள்ளதாக இருக்க வேண்டும்.


அமேசானின் 5 அதிக முன்னுரிமையுள்ள பிரிவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவு (Packaged food)

வீட்டு உபயோகத்துக்கான அடிப்படை தேவைகள் (Household Staples)

சுகாதாரம் (Hygiene)

தனிமனித பாதுகாப்பு (Personal Safety)

ஆரோக்கிய பராமரிப்பு தேவைகள் (Healthcare)

இந்த நடவடிக்கை மார்ச் 24 முதல் அமலுக்கு வந்தது. இந்நிறுவனம் மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றும். மேலும் தங்களுடைய வழக்கமான செயல்பாடுகளை ஆரம்பித்த உடன் வாடிக்கையாளர்களை தெரியப்படுத்தும் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.


குறைந்த அளவு முன்னுரிமை கொடுக்கக்கூடிய பிரிவுகளில் உள்ள பொருட்களுக்கான ஆர்டரை இப்போது எடுப்பதில்லை என்றும் அப்படிபட்ட பொருட்களுக்கான விநியோகத்தை முடக்கிவிட்டதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது. குறைந்த அளவு முன்னுரி பிரிவுகளில் உள்ள பொருட்களை முன்னரே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதை ரத்து செய்து அதற்கான பணத்தை திரும்ப பெறும் வசதியையும் அமேசான் வழங்கியுள்ளது.

அமேசான் இந்தியாவின் தலைவர் மற்றும் Global Senior VP Amit Agarwal டிவிட்டர் மூலம் புதிய மாற்றத்தை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். நிறுவனம் மிக இன்றியமையாத பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐ எட்டியுள்ள நிலையில் மத்திய அரசு 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14 வரை முழுமையான ஊரடங்கை அறிவித்து மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. தினசரி தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை விற்காத அனைத்து கடைகளையும் அடைக்கவும் வலியுறுத்தியுள்ளது.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Amazon tamil news amazon com for essential delivery on corona lockdown

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X