/tamil-ie/media/media_files/uploads/2020/08/amazon-gold-digital-gold.jpg)
Amazon tamil news, Amazon Digital gold for rupees 5: தங்கத்தில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த லால் டவுன் காலத்தில் மக்களுக்கு வசதியை உருவாக்கும் விதமாக டிஜிட்டல் தங்கம் வாங்கும் முறை பிரபலமாகி வருகிறது. இதில் அமேசான் நிறுவனமும் களத்தில் குதித்திருக்கிறது.
லாக் டவுன் காலத்தில் கடைகளில் சென்று தங்கம் வாங்குவதில் சிரமங்கள் இருக்கின்றன. அதேசமயம் தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்களிடம் அப்படியே இருக்கிறது. இதற்கு மின்னணு வர்த்தக நிறுவனங்கள் உரிய வாய்ப்புகளை வழங்குகின்றன.
Amazon Digital gold: அமேசான் தங்கம்
அமேசான் நிறுவனத்தின் நிதி சேவை பிரிவான ‘அமேசான் பே’ குறைந்தபட்சம் 5 ரூபாய்க்கும் டிஜிட்டல் தங்கம் வாங்கும் வசதியை உருவாக்கி இருக்கிறது. இந்த டிஜிட்டல் தங்கம் முதலீடு வசதிக்கு, ‘கோல்ட் வால்ட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
‘சேஃப்கோல்ட்’ நிறுவனத்துடன் இணைந்து, அமேசான் இதை செயல்படுத்துகிறது. சேஃப்கோல்ட் நிறுவனம், 99.5 சதவிகிதம் சுத்தமான 24 காரட் தங்கத்தை வழங்கும். அமேசான் வாடிக்கையாளர்கள் தங்கத்தை எந்த நேரமும் வாங்கவும், விற்கவும் செய்யலாம். லாக்கர் வாடகை எதுவும் இன்றி சேமிக்கவும் இது உதவியாக இருக்கிறது.
இதர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளங்களான பே டிஎம், போன்பி, கூகுள் பே, மொபிக்விக், ஃப்ரீசார்ஜ் ஆகியனவும் இந்த டிஜிட்டல் தங்கம் வணிகத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பேடிஎம், கூகுள் பே, போன்பீ ஆகியன குறைந்தபட்சம் ஒரு ரூபாய் வரை தங்கம் வாங்கும் வாய்ப்பை வழங்குகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.