இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று உயர்வில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 203.60 புள்ளிகள் அல்லது 0.95% உயர்ந்து 21,725.70 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 612.21 புள்ளிகள் அல்லது 0.86% அதிகரித்து 71,752.11 ஆகவும் முடிந்தது.
பரந்த குறியீடுகள் உயர்வில் காணப்பட்டன, ஸ்மால்கேப் பங்குகள் அதிக லாபம் பெற்றன. பேங்க் நிஃப்டி குறியீடு 629.05 புள்ளிகள் அல்லது 1.39% அதிகரித்து 45,996.80 புள்ளிகளில் நிலைத்தது.
அதிக லாபம், நஷ்ட பங்குகள்
நிஃப்டி 50ல் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், ஐக்வ்ஹர் மோட்டார்ஸ், டிவிஸ் லேபரேட்டரி, சன் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
அதே சமயம் எல்&டி, டைட்டன், டாடா கன்ஸ்யூமர் மற்றும் பிபிசிஎல் ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக நஷ்டமடைந்தன.
அம்புஜா சிமெண்ட்
அம்புஜா சிமெண்டின் பங்குகள் 2.7% உயர்ந்து புதிய 52 வார அதிகபட்சமான ரூ. 586.45 ஐ எட்டியது. அதன் மூன்றாம் காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு அதிகபட்சமான இந்த உயர்வு வந்தது.
பிப்.1 பட்ஜெட்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பங்குச் சந்தைகள் இன்று உயர்வை கண்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“