அமெரிக்க இ-காமர்ஸ் தளத்தில் விற்பனைக்கு வந்த இந்திய கயிறு கட்டில்: விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க இ-காமர்ஸ் தளத்தில் இந்திய கயிறு கட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.1.12 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க இ-காமர்ஸ் தளத்தில் இந்திய கயிறு கட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.1.12 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
American e-commerce website sells Indian charpai for a staggering 1.12 lakh rupees

அமெரிக்காவில் சணல் கயிறு கட்டிலின் விலை ரூ.1.12 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாகக் கிடைக்கும் பொருட்களின் இத்தகைய அதிர்ச்சியூட்டும் விலைகள் வெளிநாட்டுப் பொருட்களுக்கு மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், அது தவறாகும்.
அமெரிக்காவில் உள்ள ஒரு இ-காமர்ஸ் தளம், பாரம்பரிய இந்திய கயிறு கட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்கிறது.

Advertisment

இந்தக் கட்டில்கள் இந்தியாவில் சுமார் 2,000-10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்க இ-காமர்ஸ் தளத்தில், இது "மிகவும் அழகான அலங்காரத்துடன் கூடிய பாரம்பரிய இந்திய படுக்கை" என்று விவரிக்கப்பட்டு உளளது.

மேலும் இது உயர்தர பொருட்களால் ஆனது மற்றும் கையால் வடிவமைக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டில் 36 அங்குல அகலம், 72 அங்குல உயரம் கொண்டது.
எனினும் உயர்த்தப்பட்ட விலைக்கான காரணம் தெளிவாக இல்லை. கைவினைப் பொருள் என்பதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? அல்லது தேவை காரணமாக விலை அதிகமாக உள்ளதா? என்பது தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை.

பொதுவாக இதுமாதிரியான கட்டில்கள் வட இந்தியாவில் சணல் கயிறிலும், தென் இந்தியாவில் தென்னங் கயிறு அல்லது பனை நாரில் கட்டப்படுகின்றன.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: