Central Bank Of India | ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே பலரும் எஃப்.டி திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
இந்நிலையில், பெரும்பாலான வங்கிகளில், மூத்த குடிமக்கள் தங்கள் வைப்புத்தொகைக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டியைப் பெறுகிறார்கள்.
சென்டிரல் பேங்க் கரீமா ஃபிக்ஸட் டெபாசிட்
ஃபிக்ஸட் டெபாசிட்கள் பெரும்பாலும் கால வைப்புத்தொகைகள் அல்லது நேர வைப்புத்தொகைகள் என அழைக்கப்படுகின்றன.
நீங்கள் ஒரு நிலையான வைப்புத்தொகை கணக்கை தொடங்குமபோது, ஒரு நிதி நிறுவனத்திற்கு கடன் கொடுக்கிறீர்கள். மாற்றாக, அவர்கள் உங்கள் வைப்பு காலத்தில் நிலையானதாக இருக்கும் வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறார்கள்.
எனினும், இந்த முன்னரே தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதம் நிலையான வைப்புகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.
ரூ.1 லட்சம் முதலீடு- எவ்வளவு ரிட்டன்
இந்தத் திட்டத்தில், 777 நாள்களுக்கு ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால், 7.55 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். ஆக, சுமார் ரூ.17,260 வட்டியாக கிடைக்கும்.
அந்த வகையில், மொத்த முதிர்வுத் தொகை ரூ.1,17,260 ஆக இருக்கும். மூத்த குடிமக்களுக்கு, முதலீட்டுத் தொகைக்கு 8.05 சதவீத வட்டி கிடைக்கும் என்பதால், முதிர்வுத் தொகை ரூ.1,18,490 ஆக இருக்கும்.
எஸ்.பி.ஐ வீகேர் ஃபிக்ஸட் டெபாசிட்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) SBI WeCare சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது, இது மூத்த குடிமக்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
எஸ்பிஐ வீகேர், கூடுதல் வட்டி வழங்குவதன் மூலம் வயதானவர்களின் வருமானத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இந்தத் திட்டத்தின் மீது மீது வழங்கப்படும் வட்டி விகிதம் 7.50% ஆகும்.
எஸ்.பி.ஐ மூத்த குடிமக்கள் எஃப்.டி வட்டி விகிதங்கள்
எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு, வங்கி 4% முதல் 7.50% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு 7.50% அதிக வட்டி விகிதம் என்பதை நினைவில் கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“