ஆர்.சந்திரன்
அமெரிக்காவில் மார்க் ஜுக்கர்பெர்க் தொடங்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் போலவே, இந்தியாவில் இருந்து புதிதாக ஒன்றைத் தொடங்கும் யோசனை யாருக்கும் இருந்தால், அந்த புதிய ஐடி நிறுவனத்துக்கு ஆரம்ப முதலீடு தர தயாராக இருப்பதாக மஹேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹேந்திரா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக, சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பேசி மாய்வது – மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் நிறுவனம் செய்த விதிமீறல் குறித்துதான். இந்த வலைதளம் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டிய தனிப்பட்ட தகவல்களை, அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்ததை மீறி, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டது பிரச்னையானது. இதை ஜூக்கர்பெர்க் ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தாலும், இதுபோன்ற சமூக வலைதளங்களை எந்த அளவு நம்பலாம் என்ற கேள்வி விஸ்வருபமெடுத்தது.
கேம்பரிட்ஜ் அனலிட்டிகா, பேஸ்புக்கிடம் இருந்து பெற்ற தகவலை அமெரிக்க தேர்தலின்போது பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் நிலையில், அதேபோல, இந்திய பேஸ்புக் உறுப்பினர்களிடம் இருந்து திரட்டிய தகவல்களை இந்திய தேர்தலில் பயன்படுத்த நேர்ந்தால் என்ற சந்தேகம் இப்போது பரவலாக உள்ளது. அதையொட்டி எழுந்த விவாதத்தில், இப்போது மோடியின் பெயரிலான மொபைல் அப்ளிகேஷன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ்
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆனந்த் மஹேந்திரா, “பரவலான பங்குதாரர்களைக் கொண்டதாகவும், தொழில்முறையில் சிறப்பாக நடத்தக் கூடியதாகவும், தானே முன்வந்து விதிகளைக் கடைபிடிக்க உத்தரவாதம் தருவதுமாக ஒரு சமூக வலைதள நிறுவனம், நமது இந்திய மண்ணில் இருந்து தொடங்கும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். அப்படி ஒரு புதிய தொழில் திட்டம் கொண்டவர்கள் யாரும் இருந்தால், அவர்களைச் சந்திக்கவும், அந்த திட்டத்துக்கு தேவையான ஆரம்ப முதலீட்டிலேயே தான் பங்கேற்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
Key words :
முக்கிய சொற்கள்