மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.01 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றது.
இந்தத் திட்டம் மார்ச் 24ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு 9.01 சதவீதமும், பொதுமக்களுக்கு 8.41 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகின்றன.
தற்போதைய காலகட்டத்தில் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கு கவர்ச்சிகரமான வட்டியை வழங்குகின்றன. அரசின் சேமிப்பு திட்டங்கள் கூட கவர்ச்சிகரமான சேமிப்பாக மாறியுள்ளன.
அந்த வகையில் சாதாரண மக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்பு, மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் ஆகியவற்றை பார்க்கலாம்.
-
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வட்டி விகிதம்
ஃபின்கேரில் மூத்த குடிமக்களுக்கு 1000 நாள்கள் வைப்புத்தொகைக்கு 9.1% வட்டியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“