பார்மராக் ஆராய்ச்சி நிறுவன, இந்தியாவில் உடல் பருமன் எதிர்ப்பு மருந்து விற்பனை, 2021 வரை மந்தமான வளர்ச்சியைக் கண்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மருந்து சந்தையில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில், உடல் பருமன் எதிர்ப்பு மருந்து சந்தை, ஜனவரி 2024-ல் 32% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR)-ல் ரூ. 474 கோடியாக உயர்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் நோவோ நார்டிஸ்கின் செமகுளுடைட் (உடல் பருமன் எதிர்ப்பு மருந்து) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவ மருந்து சந்தையில் உடல் பருமன் எதிர்ப்பு மருந்து விற்பனை இந்தியாவில் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பார்மராக் ஆராய்ச்சி நிறுவன, இந்தியாவில் உடல் பருமன் எதிர்ப்பு மருந்து விற்பனை, 2021 வரை மந்தமான வளர்ச்சியைக் கண்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மருந்து சந்தையில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில், உடல் பருமன் எதிர்ப்பு மருந்து சந்தை, ஜனவரி 2024-ல் 32% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR)-ல் ரூ. 474 கோடியாக வளர்ந்துள்ளது.
பார்மராக் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, உடல் பருமன் எதிர்ப்பு மருந்துப் பிரிவில் செமகுளுடைடு மதிப்பு சந்தைப் பங்கில் 66% உள்ளது.
நாட்டில் அதிக உடல் எடை பிரச்னை உள்ளவர்கள் மொத்த மக்கள் தொகையில் 22% உள்ளனர். பெண்களில் 23%, குழந்தைகளில் 11% உடல் பருமன் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.
பார்மராக் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு துணை தலைவர் ஷீத்தல் சபாலே ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், “பெரியவர்களில் நான்கில் ஒருவர் அதிக உடல் எடை பிரிவில் வருகிறார்கள். இந்தியா வல்லரசாக வளரும் போது, 1.4 பில்லியன் இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 5% பேர் உடல் பருமன் பிரிவில் உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.” என்று கூறியுள்ளார்.
நீரிழிவு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட ரைபெல்சஸ் என்ற முத்திரை குத்தப்பட்ட வாய்வழியாக உட்கொள்ளும் செமகுளுடைட் மாத்திரை ஜனவரி 2022-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மருந்து எடையைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. அதன்பிறகு, இந்த ஆண்டு ஜனவரியில் உடல் பருமன் தடுப்பு மருந்து சந்தை ரூ. 174 கோடியிலிருந்து ரூ.474 கோடியாக உயர்ந்துள்ளது.
“பெரும்பாலும் இந்த மருந்துகள் நன்றாக இருக்கின்றன. உடல் எடையைக் குறைக்கின்றன, இதயப் பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனை மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்குப் பலனளிக்கின்றன. இருப்பினும், நோயாளிகள் தாங்களாகவே மருந்தை உட்கொள்ளத் தொடங்கக்கூடாது. இது பாராசிட்டமால் போன்றது அல்ல, எனவே, மருத்துவரின் பரிந்துரை அவசியம்.” என்று சர்க்கரை நோய், வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் நாளமில்லா சுரப்பிக்கான ஃபோர்டிஸ்-சி-டி.ஓ.சி சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர் அனூப் மிஸ்ரா ஒரு ஆங்கில செய்தி இணையதளத்தில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“