30 வயதுக்குள் சாதித்த 30 சிறந்த ஆசியர்கள் பட்டியலில் அனுஷ்கா சர்மா, சிந்துவுக்கு இடம்

10 முக்கிய துறைகளில் தேர்வு செய்து, தற்போது ஆசியாவை முன்னெடுத்துச் செல்லும் 300 தனிநபர்களின் பட்டியலை சர்வதேச வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் தயாரித்துள்ளது.

ஆர்.சந்திரன்

ஃபோர்ப்ஸ் என்ற பிரபல வணிக இதழ், 30 வயதுக்குள் சாதித்த 30 சிறந்த ஆசியர்கள் என 2018ம் ஆண்டுக்கான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, பி.வி.சிந்து உள்ளிட்ட பலர் இடம் பிடித்துள்ளார்.

10 முக்கிய வெவ்வேறு துறைகளில் தேர்வு செய்து, தற்போது ஆசியாவை முன்னெடுத்துச் செல்லும் 300 தனிநபர்களின் பட்டியலை சர்வதேச வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் தயாரித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான இந்த பட்டியல், இவ்வரிசையில் தொடர்ந்து 3வது ஆண்டாக வெளியிடப்பட்டு வருகிறது.

sindhu

பி.வி.சிந்து

இதில் இந்திய திரை உலகில் இன்று மிக அதிக சம்பளம் பெறும் நடிகையான அனுஷ்கா ஷர்மாவுடன், இந்திய விளையாட்டுத்துறை பிரபலமும், உலகத் தர வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ள பேட்மிண்டன் வீராங்கனையுமான பிவி.சிந்து, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புயல்வேக இடது கை ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, இந்திய போலோ அணியின் தலைவர் பத்மனாப் சிங், போன்றவர்களும் இடம் பிடித்துள்ளனர். இவர்களைத் தவிர, பாகிஸ்தானின் பிரபல பாடகி மோமினா முஸ்டெசன் உள்ளிட்ட வேறு சிலரும் இதில் இடம் பிடித்துள்ளனர்.

×Close
×Close