/indian-express-tamil/media/media_files/2025/06/22/laundry-modernize-2025-06-22-13-12-22.jpg)
நீராவி மற்றும் வெப்ப காற்று மூலம் இயங்கும் அந்த மெசினுக்கு, “டாக்டர் ஃபேப்ரிக் ஆட்டோமேட்டிக் அயனிங் அண்ட் ஃபோல்டிங்” என பெயரிட்டுள்ளார்.
இஸ்திரி பெட்டியில் துணிகளை இஸ்திரி செய்யும் தொழிலாளர்கள் படும் இன்னலை போக்கும் வகையிலும், மரம் வெட்டுபடுவதனை தடுத்து தனல் கறி இன்றி இஸ்திரி செய்யும் வகையிலும், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன அயனிங் மெஷின் ஒன்றை கோவையை சேர்ந்த ஆனந்த் வடிவமைத்துள்ளார்.
நீராவி மற்றும் வெப்ப காற்று மூலம் இயங்கும் அந்த மெசினுக்கு, “டாக்டர் ஃபேப்ரிக் ஆட்டோமேட்டிக் அயனிங் அண்ட் ஃபோல்டிங்” என பெயரிட்டுள்ளார். ஒரு சட்டை இஸ்திரி செய்ய ஒரு நிமிடமும், பேண்ட் இஸ்திரி செய்ய 45 நொடிகளும், வேட்டி சேலைக்கு மூன்று நிமிடம் மட்டுமே செலவிட்டால் போதுமானது. ஆட்டோமேட்டிக் முறையில் ஆடைகள் மடித்தும் தரப்படுவதனாலும் ஆடைகளை இஸ்திரி செய்வது எளிமையாக்கி இருக்கின்றார்.இந்த நவீன அயனிங் இயந்திரம் பயன்படுத்துவோருக்கு தந்து வருகிறது. இந்த மெஷின் 195 நாடுகளில் பப்ளிஸ் செய்யப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், இதில் அடுத்த முயற்சியாக, அயர்னிங் ஆர்டர்களை பெற, செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றார். ”டாக்டர் ஸ்டீம் அயர்ன்” (Dr Steam Iron) என்ற அந்த செயலியை, பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வசதி செய்திருக்கின்றனர்.
இதில் இன்ஸ்டண்ட் அயர்னிங், அரோமா அயர்னிங், ஜெனரல் அயர்னிங், அயர்ன் அட் ஹோம் என்ற நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கின்றன. இன்ஸ்டண்ட் அயர்னிங் ஆப்சனில் ஆர்டர் செய்தால் அரை மணி நேரத்திலும்,பொதுவான ஆப்சன 24 மணி நேரத்திலும் அயர்னிங் செய்து தரப்படுகின்றது.
இதில் அரோமா அயர்னிங் முறையில், ஆடைகளை ஐயர்ன் செய்த பின்னர் மூளை செயல்பாட்டிற்கு புத்துணர்வூட்டும் ஹெர்பல் ஸ்ப்ரே செய்கின்றனர் . அதே போன்று வீட்டிற்கே சென்று அயர்னிங் செய்து தர, ஐயர்ன் அட் ஹோம் என்ற ஆப்சனும் இதில் அடங்கியிருக்கின்றன.
நவீன அறிவியல் உலகத்தில் பல துறைகளிலும் ஆப் ஆட்டிப்படைக்கும் நிலையில், சலவை (அயனிங்) தொழிலும் சலைத்ததில்லை என்று சொல்லும் அளவுக்கும், டாக்டர் ஸ்டீம் ஆப்(App) அறிமுகம் அமைந்திருக்கின்றது.
சலவை தொழிலில் சாதிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருவதாகவும், அயர்னிங் தொழிலில் முதன் முதலாக ஆப் அறிமுகம் செய்து இருப்பதாகவும், இத்தொழிலை நவீனமயமாக்க இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் டாக்டர் ஃபேப்ரிக் உரிமையாளர் ஆனந்த் தெரிவித்திருக்கின்றார்.
பரபரப்பாக இயங்கும் உலகில், ஆடைகளை அயர்னிங் செய்வதற்கு என நேரம் ஒதுக்கும் நிலை தற்போது இல்லை என்றும், அதனை இலகுவாக்க இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவித்திருக்கின்றனர். வெட்ட வெயிலிலில் இஸ்திரி பெட்டியில் கறி தனலில் அனல் பறக்க செய்யும் வேலையை, ஏசி அறைக்கும் இஸ்திரி பணியை ஸ்மார்ட்டாக்கும் இந்த நவீனம் வரவேற்க தக்க வகையில் அமைந்திருக்கின்றது.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.