/tamil-ie/media/media_files/uploads/2022/08/dtnext_import_Articles_2020_Apr_202004250157462092_Aavin-ties-up-with-food-delivery-firms_SECVPF.jpg)
Tamil news updates
ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
விதிமுறைகள்
இந்தத் திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருத்தல் வேண்டும். மேலும் 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் தொகை ரூ.3 லட்சம் ஆகும். இதில் ரூ.90 ஆயிரம் மானியமாக கொடுக்கப்படும்.
விண்ணப்பிக்க..
இந்தத் திட்டத்தில் ஆதி திராவிடர் விண்ணப்பிக்க http://application.tahdco.com என்ற தளத்தில் பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற தளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து மேற்காணும் ஒப்புதல் நகலுடன் குடும்ப அட்டை, இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் (ஓராண்டுக்குள் பெற்றது), ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, திட்ட அறிக்கை, கல்வித் தகுதி, GSTIN எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவை.
மேலும் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்அனுபவம் இருத்தல் வேண்டும். அதற்கான சான்றிதழ்கள், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட உரிய தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானமும் ரூ.3 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-25246344 மற்றும் கைபேசி எண் 9445029456 ஆகியவற்றில் தொடர்புக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.