Apply for passport at nearest post office : பாஸ்போர்ட் சேவ கேந்திராவுக்கு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் ஒரு நாள் விடுமுறை எடுத்தே தீர வேண்டும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளியேற, தற்போது பொதுமக்கள் தபால் நிலையங்களிலேயே தங்களின் பாஸ்போர்ட்டினை பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Advertisment
இந்தியா போஸ்ட் இப்போது நாட்டின் பல தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பதிவு மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற பல வசதிகளை வழங்கி வருகிறது. இதற்காக, நீங்கள் தபால் நிலையத்தின் பொதுவான சேவை மையம் (சி.எஸ்.சி) கவுண்டர்களுக்கு செல்ல வேண்டும்.
உங்கள் அருகிலுள்ள தபால் நிலைய சிஎஸ்சி கவுண்டரில் பாஸ்போர்ட்டை பதிவு செய்து விண்ணப்பிப்பது எளிதானது. மேலும் அறிய, அருகிலுள்ள தபால் நிலையத்தைப் பார்வையிடவும் என்று இந்தியா போஸ்ட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
passportindia.gov.in என்ற இணையத்தின் தரவுகளின் படி, பாஸ்போர்ட் சேவை மையம் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் ஆகியவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் கிளைகளாகும், அவை பாஸ்போர்ட் வழங்குவதற்கான முன்-இறுதி சேவையை வழங்குகின்றன. பாஸ்போர்ட் வழங்குவதற்கான டோக்கன் முதல் விண்ணப்பம் வரை இந்த மையங்களில் வழங்கப்படுகிறது.
நீங்கள் ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும், தேதி கிடைத்ததும், ரசீது மற்றும் பிற அசல் ஆவணங்களின் நகலுடன் பாஸ்போர்ட் தபால் நிலையங்களில் செயல்படும் சேவா கேந்திராவிற்கு செல்ல வேண்டும். இங்கே உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும், அதன் பிறகு உங்கள் பாஸ்போர்ட் தொடர்பான தகவல்கள் எஸ்எம்எஸ் மூலம் வழங்கப்படும். இந்த செயல்முறை முழுமை அடைய 15 நாட்கள் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil