வீண் அலைச்சல் வேண்டாம்! அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.

How to Apply PAN Card Online or Offline : ரூபாய் 10000 அபராதம் வசூலிக்கப்படும்

pan card apply online : வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (Permanent Account Number Card) எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது? தொலைந்துவிட்டால் என்ன செய்வது? ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் நீங்கள் எளிமையாக தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை.

முடிந்த வரை இந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து பிறருக்கும் அறிய செய்யுங்கள்.

தேவையான ஆவணங்கள் :

1. அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இருப்பிடச் சான்றாக கடைசி 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம்.
2. பிறந்த தேதிச் சான்றாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ் கொடுக்கலாம்.
3. விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றிதழ்கள் போதுமானவை. மைனர் விண்ணப்பதாரருக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
4. ஒருவேளை மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

Apply for New PAN Card Online or Offline:. பான் கார்ட் ஆன்லைனில் விண்ணபிப்பது எப்படி:

ஆன்லைன் மூலமும் விண்ணப்பித்து பான்கார்டை பெறலாம். இதற்கான படிவங்களை //www.utitsl.co.in/pan/ அல்லது //tin.tin.nsdl.com/pan/index.html என்ற இணையத்திற்கு செல்ல வேணடும்.

விண்ணப்பத்தை ‘சப்மிட்’ செய்தபிறகு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ‘அக்னாலெட்ஜ்மென்ட்’ பகுதி தோன்றும், அதில் பத்து இலக்க பான் எண் இடம் பெற்றிருக்கும். மேலும், அதில் கலர் புகைப்படம் ஒட்டுவதற்கு 3.5 செ.மீ – க்கு 2.5 செ.மீ இடம் விடப்பட்டிருக்கும். இதனை பிரின்ட் அவுட் எடுத்து, போட்டோவை ஒட்டி, கையப்பமிட்டு புகைப்படத்துடன் கூடிய சான்று (proof of identity) மற்றும் முகவரி ஆதாரம், பான் கார்ட் விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி அல்லது செக் ஆகியவற்றை உரிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Apply pan card online : கட்டண சேவை!

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 105 ரூ கட்டணமும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 962 ரூ கட்டணமும் பெறப்படுகிறது. ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்பித்தால் 250ரூ முதல் 300ரூ வரை செலவாகும்.

கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தும்போது கூடுதலாக சேவைக் கட்டணம் இருக்கிறது. 15 நாட்களுக்குள் தபால் அல்லது கூரியர் மூலம் பான் கார்ட் வீட்டுக்கு வரும். இம்முறையில் விண்ணப்பிக்கும்போது விவரங்களை மிகவும் கவனமாகப் பூர்த்திசெய்வது மிக அவசியம். இல்லை என்றால் கார்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அப்பளை செய்த 5 நிமிடத்தில் அக்கவுண்டில் பணம்! பர்சனல் லோனில் அசத்தும் எஸ்பிஐ

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் இது சட்டப்படி குற்றமாகும். இதை வருமான வரித்துறையால் கண்டறியப்பட்டால் “Provisions of section” 272B of the Income tax Act 1961 படி ரூபாய் 10000 அபராதம் வசூலிக்கப்படும். பான் கார்டு விண்ணப்பிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூபாய் 110 மட்டுமே.

ஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா? வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close