Apply SBI EMV Debit card via online State bank of India SBI net banking tips : நீங்கள் இன்னும் உங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் (State Bank of India -SBI) எஸ்பிஐ யின் ஏடிஎம் உடனான டெபிட் அட்டையை (ATM cum-debit card) மாற்ற வில்லையா அப்படியென்றால் அது ஜனவரி 1, 2020 முதல் பயனற்றதாக போக கூடும். அப்படியென்றால் அதை வங்கி செயலிழக்க செய்துவிடும். எஸ்பிஐ வங்கியின் magstripe டெபிட் அட்டைகள் (magstripe debit card ) டிசம்பர் 31, 2019 முதல் செயலிழக்க செய்யப்படும் என்று ஏற்கனவே எஸ்பிஐ வங்கி அறிவித்திருந்தது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களது magstripe அட்டைகளை EMV chip-based ATM debit அட்டைகளாக கூடிய விரைவில் மாற்றம் செய்துக் கொள்ள கேட்டுக்கொண்டிருந்தது.
எஸ்பிஐ இணைய வழி வங்கி சேவை, எஸ்பிஐ Yono App அல்லது உங்கள் கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி உங்கள் அட்டைகளை மாற்றிக் கொள்ள முடியும். EMV chip-based debit card பெற விண்ணப்பிக்கும் முன்பு உங்கள் வீட்டு முகவரியை அப்டேட் செய்ய மறந்துவிடாதீர்கள். ஏனென்றால் புதிய அட்டை உங்கள் வங்கி கணக்கோடு பதிவு செய்யப்பட்ட முகவரிக்குதான் அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் அட்டை magstripe அட்டையா அல்லது EMV chip டெபிட் அட்டையா என்பதை நீங்களே சரிப்பார்த்துக் கொள்ளலாம். உங்கள் அட்டையின் முகப்பில் - மைய இடது நிலை (center-left position) எந்தவித சிப் (chip) பும் அமையவில்லை என்றால் அது magstripe அட்டை. அதுவே உங்கள் அட்டையின் முகப்பில் - மைய இடது நிலை ஒரு சிப் அமைந்திருந்தால் அது EMV chip டெபிட் அட்டை.
மேலும் படிக்க : மார்ச் மாத விடுமுறை பட்டியல் : பேங்க் 13 நாட்களுக்கு லீவு
EMV டெபிட் அட்டைகள் வாங்க எப்படி இணைய வங்கி சேவை மூலம் விண்ணப்பம் செய்வது. உங்களது பயனர் பெயர் (user name) மற்றும் கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி வங்கியின் இணையதள முகவரி www.onlinesbi.com ல் உள்நுழையவும். ‘ATM Card Services’ தேர்ந்தெடு என்ற தலைப்பின் கீழ் உள்ள ‘e-Services’ என்ற தேர்வை சொடுக்கவும். அடுத்து ‘Request ATM/Debit Card’ என்பதை சொடுக்கவும்.
நீங்கள் இந்த அட்டையை பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு “Green PIN” உருவாக்க வேண்டும். இது முற்றிலும் இலவசம். Magstripe அட்டையுடன் ஒப்பிடும் போது வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.