ஐ.ஐ.டி. மெட்ராஸ் டு ரூ.21,190 கோடி: இந்தியாவின் இளைய கோடீஸ்வரர் ஆன 'சென்னைப் பையன்' அரவிந்த் ஸ்ரீனிவாஸ்

2022 ஆம் ஆண்டில் டெனிஸ் யார்ட்ஸ், ஜானி ஹோ, மற்றும் ஆண்டி கோன்வின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து பெர்பிளக்சிட்டி ஏஐ (Perplexity AI) நிறுவினார். இது "எந்தக் கேள்விகளுக்கும் விரைவாகப் பதில்களைப் பெறுவதற்கான அதிவேக வழி" என்று அரவிந்த் பெருமையுடன் கூறுகிறார்.

2022 ஆம் ஆண்டில் டெனிஸ் யார்ட்ஸ், ஜானி ஹோ, மற்றும் ஆண்டி கோன்வின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து பெர்பிளக்சிட்டி ஏஐ (Perplexity AI) நிறுவினார். இது "எந்தக் கேள்விகளுக்கும் விரைவாகப் பதில்களைப் பெறுவதற்கான அதிவேக வழி" என்று அரவிந்த் பெருமையுடன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Aravind Srinivas

India’s youngest billionaire Perplexity CEO Aravind Srinivas

சாதனை என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியம்! ஆனால், அந்த சாதனையை மிக இளம் வயதிலேயே உலகறியச் செய்பவர்கள் அரிதிலும் அரிதானவர்கள். அத்தகைய ஒரு அரிய சாதனைக்குச் சொந்தக்காரர்தான் நம்முடைய சென்னைப் பையன் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்!

Advertisment

வெறும் 31 வயதே ஆன அரவிந்த் ஸ்ரீனிவாஸ், இந்தியாவின் மிகப் பெரிய ஏஐ புரட்சிக்குத் தலைமை தாங்குகிறார். அவர் உருவாக்கிய பெர்பிளக்சிட்டி ஏஐ (Perplexity AI) என்ற கான்வேர்சேஷனல் சர்ச் இஞ்சின் (Conversational Search Engine), தற்போது கூகுள் ஜெமினி மற்றும் OpenAI-யின் சாட் ஜிபிடி போன்ற உலகின் ஜாம்பவான்களுக்கே சவால் விடுக்கும் அளவுக்கு வேகமாக வளர்ந்துள்ளது.

ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025 (M3M Hurun India Rich List 2025) பட்டியலில், ₹21,190 கோடி நிகர மதிப்புடன், இந்தியாவின் இளைய கோடீஸ்வரராக அவர் அடியெடுத்து வைத்திருப்பது, இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது!

யார் இந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்?

கல்விப் பின்னணி: சென்னைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த அரவிந்த், உலகத் தரம் வாய்ந்த கல்விப் பின்னணியைக் கொண்டவர். இவர் ஐஐடி மெட்ராஸில் மின் பொறியியலில் இரட்டைப் பட்டம் பெற்றார். பின்னர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் (UC Berkeley) கம்ப்யூட்டர் சயின்ஸில் முனைவர் பட்டத்தை (PhD) முடித்தார்.

பணியனுபவம்: தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, ஒபன்ஏஐ (OpenAI), கூகுள் (Google), மற்றும் டீப்மைண்ட் (DeepMind) போன்ற உலகின் உச்சபட்ச ஏஐ ஆய்வகங்களில் பணிபுரிந்து, செயற்கை நுண்ணறிவு குறித்த ஆழமான அனுபவத்தைப் பெற்றார். இதுவே Perplexity-ஐ உருவாக்கும் அடித்தளமாக அமைந்தது.

நிறுவனம்: 2022 ஆம் ஆண்டில் டெனிஸ் யார்ட்ஸ், ஜானி ஹோ, மற்றும் ஆண்டி கோன்வின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து பெர்பிளக்சிட்டி ஏஐ (Perplexity AI) நிறுவினார். இது "எந்தக் கேள்விகளுக்கும் விரைவாகப் பதில்களைப் பெறுவதற்கான அதிவேக வழி" என்று அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பெருமையுடன் கூறுகிறார்.

மின்னல் வேக வளர்ச்சி: 2025 மே மாதம், ஏர்டெல் (Airtel) நிறுவனத்துடன் Perplexity ஒரு முக்கிய கூட்டணியை ஏற்படுத்தியது. இதன் மூலம், இந்தியாவில் உள்ள 36 கோடிக்கும் அதிகமான பயனர்களுக்கு இலவச 'Perplexity Pro' அணுகல் கிடைத்தது. இது உலக அளவில் அதன் மாதாந்திர செயல்பாட்டில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையை 30 மில்லியனுக்கும் மேலாக உயர்த்தியது.

சாதனை: இந்த அதிவேக வளர்ச்சியால், 2025 ஜூலைக்குள் Perplexity-யின் மதிப்பு $18 பில்லியனாக உயர்ந்தது. இது அரவிந்த் ஸ்ரீனிவாஸை உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்களுக்கு இணையாக உயர்த்தியது.

Advertisment
Advertisements

அரவிந்தின் இந்த முயற்சிக்குப் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) உட்படப் பல முன்னணி முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மேலும், ஆப்பிள் (Apple) மற்றும் மெட்டா (Meta) போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கவும் ஆர்வம் காட்டின. ஆனால், அரவிந்த் தனது நிறுவனத்தைத் தனித்து இயங்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

2028-ம் ஆண்டிற்குப் பிறகு தனது நிறுவனத்தை பங்குச்சந்தையில் வெளியிட (IPO) திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: