Tax Saving Investment | வரி-சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் டெர்ம் டெபாசிட் ஹோல்டிங்ஸ் அடிப்படையில் முதல் 5 வங்கிகள் இங்கே உள்ளன. இதில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் உள்ளன.
அந்த வகையில், ஆக்சிஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் ஐந்தாண்டுகளில் ரூ.2.12 லட்சமாக உயரும்.
அடுத்து பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6.7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பொதுத்துறை வங்கிகளில் இந்த வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் ஐந்தாண்டுகளில் ரூ.2.09 லட்சமாக உயரும்.
பாங்க் ஆஃப் இந்தியா வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
வருமான வரிச்சட்டம் பிரிவு 80C உங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைக்கிறது.
பொதுவாக, வரி-சேமிப்பு வங்கி நிலையான வைப்புத்தொகை, குறைந்த வரி அடைப்புக்களில் இருப்பவர்களுக்கும், அவர்களின் ஓய்வு காலத்தை நெருங்கி இருப்பவர்களுக்கும், மூலதனப் பாதுகாப்பிற்காக ஒரு பிரபலமான கருவியாக கருதப்படுகிறது.
நீங்கள் இன்னும் உங்கள் வரி திட்டமிடலைத் தொடங்கவில்லை என்றால், 2023-24 நிதியாண்டில் வரி சேமிப்பு முதலீடுகளைச் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும் என்பது நினைவுக் கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“