நீங்கள் வாங்கும் நகை தூய்மையானதா? போலியான தங்கத்தை கண்டுபிடிப்பது எப்படி? இதுவரை யாரும் சொல்லாத பரம ரகசியம்!

இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான தங்கத் தேவையில் பாதிக்கும் மேற்பட்டது தங்க நகைகளே ஆகும். இதனால் வாங்கப்படும் தங்கத்தின் தூய்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான தங்கத் தேவையில் பாதிக்கும் மேற்பட்டது தங்க நகைகளே ஆகும். இதனால் வாங்கப்படும் தங்கத்தின் தூய்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
New Update
Pure gold

உலகிலேயே அதிகமாக தங்கத்தை பயன்படுத்துபவர்களின் பட்டியலில் இந்தியர்களும் அடங்குவர். அப்படியென்றால் இந்தியர்கள் தங்கத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? இந்தியர்கள், பெரும்பாலும் தங்கத்தை நகைகளாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான தங்கத் தேவையில் பாதிக்கும் மேற்பட்டது தங்க நகைகளே ஆகும்.

Advertisment

நீங்கள் வாங்கும் தங்கம் உண்மையில் தூய்மையானதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏறக்குறைய தினமும் போலியான தங்கம் குறித்த தகவல்கள் செய்தித் தாள்களில் வருகின்றன. இதனால் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை மக்கள் இழக்கின்றனர்.

அனைத்திற்கும் மேலாக, தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் பத்து கிராம் தங்கம் ரூ. 50,000. இந்தியாவில் தற்போது தங்கத்தின் விலை ரூ. 95,420 ஆகும். ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை இதன் விலை இருந்தது.

தங்க விற்பனையாளர்கள், முறைகேடு செய்வதற்கான தூண்டுதல் இப்போது அதிகமாக உள்ளது. இப்போது, ​​அனைத்து தங்க விற்பனையாளர்களும் முறைகேடு செய்கிறார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அதே நேரத்தில், தங்க நகை வாங்குபவர்கள் ஏமாற்றப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

Advertisment
Advertisements

அப்படியானால், நீங்கள் வாங்கும் தங்கம் தூய்மையானது என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?

இதில், உங்களுக்கு உதவக்கூடிய வழிகள் உள்ளன.

அதன்படி, இந்திய அரசு ஹால்மார்க் விதிகளை அமல்படுத்தியுள்ளது. இப்போது நகைக் கடைகள் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த முறை நீங்கள் 18, 22 அல்லது 20 காரட் தங்க நகைகளை வாங்கும் போது, உங்கள் நகைக் கடைக்காரரிடம் "ஹால்மார்க்" முத்திரையை கேளுங்கள். நீங்கள் வாங்கும் காதணி, நெக்லஸ் அல்லது வேறு எந்த நகை வகையிலும் மூன்று விஷயங்களைக் காட்டும்படி நகைக் கடைக்காரரிடம் அறிவுறுத்துங்கள்.  
இந்திய தர நிர்ணய பணியகத்தின் (BIS) லோகோ, காரட்டேஜ், தூய்மைக்கான ஃபைன்நெஸ் மற்றும் 6 இலக்க எழுத்துரு (alphanumeric HUID) ஆகியவற்றை உங்களிடம் காண்பிக்குமாறு கேளுங்கள்.

இந்திய தர நிர்ணய பணியகம் (BIS), மார்ச் 31, 2023க்குப் பிறகு 6 இலக்க எழுத்துரு ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் அல்லது தங்கப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.

ஹால்மார்க் செய்யப்பட்ட ஒவ்வொரு நகைக்கும் ஒரு தனித்துவமான HUID எண் உள்ளது.

இதை எப்படி சரிபார்ப்பது?

உங்கள் தொலைபேசியில் BIS Care App-ஐ பதிவிறக்கி, நகையை ஜூம் செய்து HUID-ஐ படிக்கவும். அதன் பயன்பாட்டில் HUID எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது, நகையை ஹால்மார்க் செய்த நகைக் கடைக்காரர், அவர்களின் பதிவு எண், பொருளின் தூய்மை, பொருளின் வகை, அத்துடன் பொருளை சோதித்து ஹால்மார்க் செய்த ஹால்மார்க்கிங் மையத்தின் விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

6 இலக்க HUID உடன் தங்க நகைகளின் தூய்மை அல்லது ஃபைன்நெஸ் உத்தரவாதம் எளிதாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் எதிர்காலத்தில் அதற்கான சரியான சந்தை விலையைப் பெற்றுத்தரும்.

இதைச் சரிபார்க்க தவறினால் என்ன செய்வது? 

இப்போதும் கூட நீங்கள் அதைச் சரிபார்க்கலாம். மேலும், நீங்கள் ஏமாற்றப்பட்டால் இழப்பீடு பெற உதவும் சட்டம் உள்ளது.

ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள், நகையில் குறிக்கப்பட்டதை விட குறைவான தூய்மையுடன் காணப்பட்டால், அதனை வாங்கியவர் இழப்பீடு பெற உரிமை உள்ளது. எனவே, அடுத்த முறை நீங்கள் நகை வடிவில் தங்கம் வாங்கும் போது, உண்மையான பொருளை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: