கிரெடிட் கார்டை கேன்செல் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு என்ன ஆகும் தெரியுமா?

கிரெடிட் கார்டு உபயோகிக்காதவர்கள் அதை கேன்செல் செய்ய நினைக்கலாம். ஆனால், அப்படி செய்வது உங்கள் கிரெடிட் ஸ்கோர் (CIBIL) மீது எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்று விளக்குகிறார் பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ்.

கிரெடிட் கார்டு உபயோகிக்காதவர்கள் அதை கேன்செல் செய்ய நினைக்கலாம். ஆனால், அப்படி செய்வது உங்கள் கிரெடிட் ஸ்கோர் (CIBIL) மீது எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்று விளக்குகிறார் பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ்.

author-image
WebDesk
New Update
sbi, sbi card, sbi credit card, sbi credit card fees, sbi credit card late payment, sbi credit card late payment charges, sbi bank, sbi new late cc payment fee

கிரெடிட் கார்டை கேன்செல் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு என்ன ஆகும் தெரியுமா?

கிரெடிட் கார்டை ரத்து செய்தால் என்ன ஆகும்?

Advertisment

1. Credit History குறையும் – உங்கள் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படும்போது, உங்கள் credit history (எவ்வளவு காலமாக கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்கள்) முக்கியமானது. கார்டை cancel செய்தால், உங்கள் credit timeline குறையும், இது ஸ்கோரைக் குறைக்கலாம்.

2. Credit Limit குறையும் – கிரெடிட் கார்டை cancel செய்தால், உங்கள் மொத்த கடன் வரம்பு (credit limit) குறைகிறது. இதனால், உங்கள் credit utilization ratio அதிகரிக்கலாம். இது ஸ்கோரை பாதிக்கும்.

3. கடன் வகைகள் குறையும் – பல வகையான கடன் (கிரெடிட் கார்டு, லோன், EMI போன்றவை) வைத்திருப்பது கிரெடிட் ஸ்கோருக்கு நல்லது. கார்டை மூடினால், கடன் வகை எண்ணிக்கை குறையலாம்.

Advertisment
Advertisements

எப்போது கிரெடிட் கார்டை ரத்து செய்யலாம்?

1. அதிக annual fee இருந்தால். 

2. உபயோகிக்காமல் இருந்தால் (ஆனால், அடிக்கடி பயன்படுத்தாத கார்டுகளையும் சில நேரங்களில் உபயோகிக்கவும்).

3. கிரெடிட் கார்டு கட்டுப்பாட்டில் இல்லை என்றால் (அதிக கடன் சேர்ந்துவிட்டால்).

மாற்று வழிகள் என்னென்ன?

1. கார்டை ரத்து செய்வதற்கு பதிலாக, ஆண்டு கட்டணம் இல்லாத கார்டுக்கு மாறலாம்

2. கிரெடிட் லிமிட் குறைத்து, கார்டை வைத்திருக்கலாம்.

3. அரிதாக உபயோகித்தாலும், ஒரு சில டிரான்சக்ஷன்கள் செய்து கார்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்கலாம்.

கிரெடிட் கார்டை cancel செய்வது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். எனவே, முன்பே திட்டமிட்டு, மாற்று வழிகளை முயற்சிக்கவும். கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் லோன் அல்லது புதிய கிரெடிட் கார்டு எடுப்பது எளிதாக இருக்கும். கிரெடிட் கார்டை cancel செய்தால் உங்கள் credit score குறையும். அதனால், லோன் அல்லது கார்டு தேவைப்படும்போது பிரச்னை ஏற்படலாம். எனவே, யோசித்து முடிவு எடுக்க அறிவுறுத்துகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.!

Credit card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: