ஈக்விட்டி குறியீடுகள் வாரத்தின் கடைசி நாள் வர்த்தக அமர்வை சிவப்பு நிறத்தில் முடித்தன.
18,016.20 , 18,145.45 என நகர்ந்த நிலையில், பிஎஸ்இ சென்செக்ஸ் 60,630க்கு கீழேயும், என்எஸ்இ நிஃப்டி 50 18030க்கு கீழே நிலைபெற்றன.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (எச்யுஎல்), ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே இந்தியா மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை நிஃப்டி 50 இன் அதிக நஷ்டம் அடைந்தன.
கோல் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட், எச்டிஎஃப்சி மற்றும் ஐடிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
துறைசார் குறியீடுகள் கலவையாக வர்த்தகமாகின. வங்கி நிஃப்டி 0.75% உயர்ந்தது, நிஃப்டி ஐடி 0.25%, நிஃப்டி பொதுத்துறை வங்கி 0.80% மற்றும் நிஃப்டி ஆயில் & கேஸ் 0.25% முன்னேறியது. நிஃப்டி ஆட்டோ 0.16% சரிந்தது, நிஃப்டி எஃப்எம்சிஜி 0.85% சரிந்தது, நிஃப்டி மெட்டல் 0.55% சரிந்தது.
ஆசிய பங்குச் சந்தைகள்
ஆசிய சந்தைகள் வாரத்தின் கடைசி வர்த்தக அமர்வை பச்சை நிறத்தில் முடித்தன. சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 24.53 புள்ளிகள் அல்லது 0.76% உயர்ந்து 3,264.81 ஆக காணப்பட்டது.
ஜப்பானின் நிக்கேய் 225 148.30 புள்ளிகள் அல்லது 0.56% முன்னேறி 26,553.53 ஆக உள்ளது. ஹாங்காங்கின் ஹாங் செங் 4.260% அல்லது 393 ஆக உயர்ந்தது.
இந்திய பங்குச் சந்தைகள்
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 236.66 புள்ளிகள் அல்லது 0.39% சரிந்து 60,621.77 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 50 80.20 புள்ளிகள் அல்லது 0.44% குறைந்து 18,027.65 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/