Atal Pension Yojana : 60 வயதிற்கு பிந்தைய காலத்தில் பொருளாதார பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசையும் விருப்பமும் தான். ஆனாலும் அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பங்களும் யோசனைகளும் இருக்கும். பலர் ஓய்வூதிய திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்வார்கள்.
அடல் பென்சன் யோஜனா என்று வழங்கப்படும் இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதினர் வரை தங்களை இணைத்துக் கொள்ளலாம். மத்திய அரசு, வருமான வரி வரம்பில் வராத வருமானம் கொண்டவர்களை கவனத்தில் கொண்டு அவர்களுக்காக கூட்டாக இந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. வருமான வரி வரம்பில் வராதவர்களின் பங்கில் 50%-த்தை அல்லது வருடத்திற்கு 1000த்தை இந்த திட்டத்தில் பங்களிக்கும் மத்திய அரசு. ஆனால் மற்றவர்களுக்கு இந்த பங்களிப்பை மத்திய அரசு செய்யவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனிநபர் மாதந்தோறும் ரூ .1000 ஓய்வூதியம் பெற ரூ .42 செலுத்த வேண்டும். ரூ .2000 மாத ஓய்வூதியத்திற்கு மாதத்திற்கு ரூ .84, ரூ .3,000 மாத ஓய்வூதியத்திற்கு மாதத்திற்கு ரூ .126, ரூ .4,000 மாத ஓய்வூதியத்திற்கு மாதத்திற்கு ரூ .168, மற்றும் ரூ .5,000 ஓய்வூதியத்திற்கு மாதத்திற்கு ரூ. 210 பணத்தை செலுத்த வேண்டும்.
எளிமையான வார்த்தைகளில் கூறுவதானால், மாதத்திற்கு ரூ .5,000 அல்லது ஆண்டுக்கு ரூ .60,000 ஓய்வூதியம் பெற நீங்கள் ஒரு நாளைக்கு ரூ .7 (ஒவ்வொரு மாதமும் ரூ. 210) முதலீடு செய்ய வேண்டும்.
பங்களிப்புத் தொகையை செலுத்துவதை நிறுத்தினால் 6 மாதங்களுக்கு பிறகு அடல் ஓய்வூதிய யோஜனா கணக்கு முடக்கப்படும்.
12 மாதங்களுக்கு பிறகு கணக்கு செயலிழக்கும்.
மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்தால் அடல் ஓய்வூதிய யோஜனா கணக்கு 24 மாதங்களுக்குப் பிறகு மூடப்படும்.. ஆகையால், அடல் ஓய்வூதிய யோஜனா சந்தாதாரர்கள் பங்களிப்புத் தொகையை தானாக டெபிட் செய்வதற்கு வங்கிக் கணக்கிற்கு போதுமான நிதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil