Advertisment

விலையோ ரூ.1 லட்சத்துக்கும் குறைவு, 6 மணி நேரத்தில் சார்ஜிங்: வந்தாச்சு ஏதர் ஸ்கூட்டர்

இந்திய சந்தைகளில் ஏதர் ஸ்கூட்டர்கள் ரூ.98,079 முதல் கிடைக்கின்றன.

author-image
WebDesk
New Update
Ather 450X now costs under Rs 1 lakh

இந்திய சந்தைகளில் போட்டியை சமாளிக்கும் வகையில் ஏதர் ரக மின்சார ஸ்கூட்டிகள் விலை குறைப்பை அமல்படுத்தி உள்ளன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் ஏத்தர் 450X மைனஸ் ப்ரோ பேக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், இந்நிறுவனம் மிகவும் மலிவு விலையில் 450X ஐ அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல், பதிப்பின் விலையும் குறைத்துள்ளது.
இதனால் டெல்லியில் ரூ.98,079 முதல் இந்த எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. இதேபோல் 450X ப்ரோ பேக்கின் விலை ரூ.1.28 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

மேலும் இந்த வாகனத்தில் 4G LTE சிம், புளூடூத் 4.2 இணைப்பு, ஆட்டோ இண்டிகேட்டர் ஆஃப் செயல்பாடு, ஃபாலோ மீ விளக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), அழைப்பு மற்றும் இசை கட்டுப்பாடுகள் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.

இதுமட்டுமின்றி 90 கிமீ வேகத்தில் செல்லும் ஏதர் ஸ்கூட்டர்கள் 0-40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய 15 முதல் 20 மணி நேரம் வரை எடுக்கும்.

எனினும், ப்ரோ பேக் ஸ்கூட்டர் 5 மணி 40 நிமிடங்களில் சார்ஜ் செய்வதை உறுதி செய்கிறது. இரண்டு டிரிம்களும் வாகனம் மற்றும் சார்ஜருக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ நிலையான உத்தரவாதத்துடன் (வாரண்டி) வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Electric Vehicle Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment