Advertisment

ரூ.1 லட்சம் வரை வருமானம்.. எஸ்.பி.ஐ. கொடுக்கும் இந்த வாய்ப்பு தெரியுமா?

எஸ்.பி.ஐ. எ.டிஎம் மூலமாக ரூ.1 லட்சம் வரை வீட்டில் இருந்தப் படியே சம்பாதிக்கலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI ATM Franchise Business Earn Up To Rs 70000 Per Month

எஸ்.பி.ஐ. ஏடிஎம் தொழில் மூலம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை மாதம் சம்பாதிக்கலாம்.

SBI ATM Franchise : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வீட்டில் இருந்தப் படியே சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்த ஏடிஎம் ஃபிரான்சைஸ் தொழிலுக்கு விண்ணப்பிக்க, ஏடிஎம் அமைக்கும் படியான 50 முதல் 80 சதுர அடி இடம் இருத்தல் வேண்டும்.

Advertisment

மேலும், அந்தக் கட்டடம் உறுதியான கான்கீரிட் ஆக இருத்தல் வேண்டும். 100 மீட்டருக்குள் வேறு எந்த ஏ.டி.எம்.மும் இருத்தல் கூடாது.

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதும் அவசியமாகும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1) பான் கார்டு

2) ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை

3) மின் கட்டண ரசீது

4) ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்ட்

5) பாஸ்போர்ட் அளவு புகைபடங்கள் 4

6) ஜிஎஸ்டி எண்

விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்.பி.ஐ ஏடிஎம் ஃபிரான்சைஸ்க்கு விண்ணப்பிக்க எஸ்.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்துக்கு செல்ல வேண்டும். அதில் மேற்கூறிய தகவல்களை விண்ணபிக்க வேண்டும்.

இந்த ஏடிஎம் ஃபிரான்சைஸ் மூலம் மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறலாம்.

மேலும், இந்த ஏ.டி.எம்.களில் 300க்கு மேல் பரிவர்த்தனைகள் நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Sbi Atm Debit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment