Advertisment

ரூ.5 ஆயிரம் டெபாசிட்: காவல் துறை வாகனங்களை ஏலம் எடுக்க வாய்ப்பு

வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (08.06.2023)-ம் தேதி காலை 08:00 மணிமுதல் 10:00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய்.5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Auction of used police vehicles will be held on June 8

காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஏலம் ஜூன் 8ஆம் தேதி நடைபெறுகிறது.

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட Tempo Traveller-05, Tata Sumo, Tata Spacio, Grande, Tavera என 09 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்- 4 என ஆக மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏல முறையில் ஏலம் நடைபெற உள்ளது.

Advertisment

இந்த ஏலம் ஜூன் 8-ம் தேதி காலை 10:00 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் (05.06.2023) முதல் (07.06.2023)-ம் தேதி வரை தினந்தோறும் காலை 10:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (08.06.2023)-ம் தேதி காலை 08:00 மணிமுதல் 10:00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய்.5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் இரண்டு சக்கர வாகனத்திற்கு 12% சரக்கு மற்றும் சேவை வரி (GST)-யையும் சேர்த்து செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கண்ட இந்த தகவலை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment