ஒரு காரை உரிமையாக்கி அதை பராமரிக்க அதிகம் செலவாகும் அதற்காக நீங்கள் அதை விடவேண்டியதில்லை. காருக்கான காப்பீட்டு பிரீமியம் தொகைகள் அதிகரித்து வருகிறது. ஒரு புது வாகனத்தை வாங்குவதற்கு முன் அதை காப்பீடு செய்ய எவ்வுளவு செலவாகும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். வாகனத்தின் தயாரிப்பு, அதன் மாடல் மற்றும் வாகனத்தின் ஆண்டு ஆகியவற்றை பொருத்து காப்பீட்டு பிரீமியம் தொகைகள் பரவலாக மாறுபடும்.
Shop Around for Better Quotes:
உங்களுடைய காப்பீடு புதுப்பிக்கப்பட வேண்டி இருந்தால் அல்லது வருடாந்திர பிரீமியம் தொகை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருந்தால் வேறு நிறுவனங்களின் காப்பீட்டு பிரீமியம் தொகை எவ்வளவு வருகிறது குறைவாக வருகிறதா என்பதை வாங்கி பாருங்கள்.
வீடு வாங்கும் ஐடியாவில் இருக்கீங்களா? அப்படியே எல்ஐசி பக்கம் கொஞ்சம் வாங்க
பிரீமியத்தை ஒப்பிட்டு பாருங்கள்
அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களும் ஆன்லைன் கவர்களை (online covers) வழங்குகின்றன. வயது, ஓட்டுனர் பதிவு மற்றும் காப்பீடு வழங்கும் நிறுவனம் குறிப்பிடும் அளவுகோல்களின் அடிப்படையில் காப்பீட்டு பிரீமியம் தள்ளுபடியை பெறுங்கள்.
Opt appropriate Coverage
கார் காப்பீட்டு பாலிசி என்பது பொதுவாக முன் வரையறுக்கப்பட்ட நன்மைகளின் தொகுப்பாகும். ஆயினும் உங்களுக்கு உண்மையிலேயே தேவையில்லாத தேவையற்ற add-on களை தவிருங்கள். இது கார் காப்பீட்டு பிரீமியம் தொகையை சற்று குறைக்க உதவும்.
கூடுதல் பொருத்துதல்களை (additional fittings) தவிருங்கள்
உங்களுடைய கார் காப்பீட்டு பிரீமியம் பொதுவாக வாகனத்தின் மதிப்பு, வாகனத்தின் வயது மற்றும் எரிபொருளின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே தொழிற்சாலை பொருத்துதல்களை தவிர்த்து கூடுதலாக உள்ள பொருத்துதல்கள் பிரீமியம் தொகையை அதிகரிக்கும்.
Raise Deductibles
உங்கள் விலக்கு (Deductibles) கூறுகளை உயர்த்துவதன் மூலம் வாகன பிரீமியத்தை கடுமையாக குறைக்கலாம்.
Don’t Claim Small Sums
ஒவ்வொரு claim இல்லாத ஆண்டுக்கும் நீங்கள் no-claim bonus (NCB) பெற உரிமை உண்டு. நீங்கள் செய்யும் சிறிய claim கூட இந்த தனித்துவமான நன்மையை இழக்க வைத்துவிடும். இது உங்கள் கார் காப்பீடு பிரீமியத்தை அதிகப்படியாக 50 சதவிகிதம் வரை குறைத்துவிடும்.
எஸ்.பி.ஐ-யின் இமாலய சாதனை... பிரமிப்பு தான்!
பாலிசியை சரியாக கட்டுங்கள்
காருக்கான காப்பீட்டு பிரீமியத்தை அதற்கான தேதியில் சரியாக புதுப்பித்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட தேதியில் கட்டவில்லை என்றால் no-claim bonus பெற தகுதி பெற மாட்டீர்கள். எனவே காருக்கான காப்பீட்டு பிரீமியத்தை குறிப்பிட்ட தேதியில் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
Transfer NCB from Old to New
காருக்கான காப்பீடு யார் அதை வாங்குகிறார்களோ அவர்களோடு இணைக்கப்பட்டு இருக்கும். அது காருடன் இணைக்கப்பட்டு இருக்காது. எனவே எந்தவித claim மும் செய்யவில்லை என்றால் திரட்டப்பட்டுள்ள bonus தொகையை புதிதாக நீங்கள் வாங்கும் காருக்கு மாற்றிக் கொள்ளுங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.