பயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் அதிகரிப்பு – SIAM அறிக்கை

மொத்தம் 17,57,264 இருசக்கர வாகனங்கள் அக்டோபரில் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன

By: Updated: November 15, 2019, 02:09:31 PM

Automobile industry growth sales SIAM report : உள்நாட்டு சந்தையில்  பயணிகள் வாகன விற்பனை அதிகரித்துள்ளதாக சியாம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆட்டோ மொபைல் துறை, கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகின்றது.   இந்நிலையில், இது குறித்து தொழிற்துறை அமைப்பான சியாம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த அக்டோபரில் மட்டும் மொத்தம் 2,85,027 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அதன் அறிக்கையில்,இந்த விற்பனை கடந்த ஆண்டு ஆக்டோபரில், 2,84,223 ஆக இருந்தது என்றும்  பயணிகள் வாகனங்களின் விற்பனை ஓரளவு அதிகரித்துள்ளது வாகனத்துறையில் உள்ள சரிவை மீட்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Automobile industry growth sales SIAM report : விற்பனையும் வீழ்ச்சியும் கடந்து வந்த பாதை

பயணிகள் வாகனங்கள் பிரிவில்   21.14 சதவீதம் உற்பத்தி குறைந்து 2,69,186 ஆகவும் ஏற்றுமதி 2.18 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

மொத்த பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி 2.18 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி 21.14 சதவீதம் குறைந்து 2,69,186 ஆக இருந்தது.

மொத்த பயணிகள்  வாகன விற்பனையில் 1,62,343 ஆக உள்ளது. இது  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30.22 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

பயணிகள் வாகனங்கள் என்றால் பயணிகள் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வேன்கள் ஆகும்.

பயணிகள் வாகனங்கள் வணிக வாகனங்கள், இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 12.76 சதவீதமாக குறைந்துள்ளது.

பயணிகள் வாகனங்களின் மொத்த  ஏற்றுமதி 2.72 சதவீதம் உயர்ந்து, உற்பத்தி 26.22 சதவீதமாக சரிந்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் 51,439 இலகுரக வர்த்தக வாகனங்கள் உட்பட மொத்தம் 66,773 வணிக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

மொத்தம் 17,57,264 இருசக்கர வாகனங்கள் அக்டோபரில் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  இது   கடந்த ஆண்டைவிட 14.43 சதவீதம்  சரிந்துள்ளது.

மேலும் படிக்க : மாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Automobile industry growth sales siam report sales increased in october

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X