பி.எஃப். கணக்கின் மூலம் ரூ. 7 லட்சம் வரை சலுகைகள்! பெறுவது எப்படி?

இந்த திட்டம் எம்ப்ளாயி டெபாசிட் லிங்க்ட் இன்ஸ்யூரன்ஸ் (Employees’ Provident Fund Organisation) என்று அழைக்கப்படுகிறது. இதன் தேவை என்ன? இதனால் தொழிலாளர்கள் அடையும் பயன்கள் என்ன? இந்த சேவையை எப்படி பெறுவது என்பது போன்ற தகவல்களை நாம் இங்கே காண உள்ளோம்.

EPFO’s Deposit Linked Insurance Scheme : சம்பளம் வாங்கும் பணியாளர்களின் மிகவும் நம்பத்தகுந்த முதலீட்டு அல்லது சேமிப்புத் திட்டமாக அமைந்துள்ளது பி.எஃப். சேவை. இந்த நிலையான வைப்பு நிதியின் மூலம் சமகால தேவைகள் மட்டுமின்றி எதிர்கால தேவைகள், ஓய்வுக்கு பிந்தைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலும். நீங்கள் ப்ரீமியம் ஏதும் செலுத்தாமல் ரூ. 7 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையை தொழிலாளர்கள் வைப்பு நிதி மூலம் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த திட்டம் எம்ப்ளாயி டெபாசிட் லிங்க்ட் இன்ஸ்யூரன்ஸ் (Employees’ Provident Fund Organisation) என்று அழைக்கப்படுகிறது. இதன் தேவை என்ன? இதனால் தொழிலாளர்கள் அடையும் பயன்கள் என்ன? இந்த சேவையை எப்படி பெறுவது என்பது போன்ற தகவல்களை நாம் இங்கே காண உள்ளோம்.

காப்பீட்டு வசதிகள் மட்டுமின்றி, பி.எஃப். கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது இந்த இ.டி.எல்.ஐ திட்டம்.

அதிகபட்ச காப்பீட்டு பயன்கள்: இந்த திட்டத்தின் கீழ், கணக்கு வைத்திருக்கும் நபர் உயிரிழந்தால் அவரின் சட்டப்பூர்வ வாரிசுக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சமாக இந்த காப்பீட்டு தொகை அதிகரிக்கப்பட்டது.

குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட நலன்கள் : கணக்கு வைத்திருக்கும் தொழிலாளி கடந்த 12 மாதங்களில் தொடர் சேவையில் இருந்திருந்தால் இந்த காப்பீட்டு தொகை ரூ. 2.5 லட்சமாக இருக்கும்

இலவச சலுகைகள் : EDLI திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற ஊழியர்கள் பிரீமியம் செலுத்தத் தேவையில்லை. 15,000 ரூபாய் உச்சவரம்புடன் மாத ஊதியத்தில் 0.50 சதவீத ப்ரீமியம் பணியில் அமர்த்தும் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

பதிவு இல்லை: இந்த சலுகைகளை பெற இ.பி.எஃப்.ஒ. கணக்கு வைத்திருக்கும் ஒரு நபர் தனியாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நேரடி வங்கி பரிமாற்றம் : இந்த பணம் நேரடியாக இ.பி.எஃப்.ஒ கணக்கு வைத்திருக்கும் நபர் நாமினியாக யாரை நியமித்தாரோ அவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Avail free benefits of up to rs 7 lakh under epfos deposit linked insurance scheme

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com