axis bank account axis bank savings : டெபாசிட் தொகைகளை முதிர்வு காலத்துக்கு முன்பே எந்தவித அபராதமும் இல்லாம் முழுத்தொகையையும் வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.
அனைத்து வகையான ரீட்டெய்ல் டெபாசிட் திட்டங்களிலும், அபராதம் இல்லாமல் முன்கூட்டியே பணம் எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது. 2020, டிசம்பர் 15ம் தேதிக்கு முன்னர் அல்லது அதன்பிறகு போடப்பட்ட 2 ஆண்டுகளுக்கு மேலான டெபாசிட் திட்டங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது. மேலும், அனைத்து விதமான புதிய டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் (recurring deposits) திட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெபாசிட் பணத்தை அபராதம் இல்லாம் முன்கூட்டியே எடுத்துக்கொள்ளலாம் என ஆக்சிஸ் வங்கி அறிவித்திருந்தாலும் அதற்கு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான டெபாசிட் திட்டங்களில் முழு தொகையையும் அபராதம் இல்லாமல் எடுக்க விரும்புவோர், 15 மாதங்களுக்குப் பிறகு மட்டுமே எடுக்க முடியும். அதற்கு முன்கூட்டியே எடுத்தால் கனிசமான தொகை அபராதம் விதிக்கப்படும் என ஆக்சிஸ் விளக்கியுள்ளது.
ஆனால், டெபாசிட் முழுத்தொகையில் 25 விழுக்காடு முன்கூட்டியே எடுத்துக்கொள்ளலாம். அதற்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாது என ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது.