திடீர் செலவுகளுக்காக பிறரிடம் கடன் கேட்கும் நிலையைத் தவிர்க்கவே நாம் கிரெடிட் கார்டுகளை வாங்குகின்றோம். இது ஏறக்குறைய ஷாப்பிங் லோனைப் போலத்தான். ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்திவிட்டால் வட்டிகூட கட்டத் தேவையில்லை.
பொதுவாக அனைத்து வங்கிகளும் தங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணங்களை வசூலிக்கும் நிலையில், சில வங்கிகள் முதல் வருடத்திற்கு மட்டும் இந்த கட்டணத்திற்கு விலக்கு அளிக்கின்றன. இந்த வருடாந்திரக் கட்டணம் முழுவதும் வங்கி மற்றும் கார்டின் வகையைப் பொருத்தது.
வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய நிலுவைத் தொகை முழுவதையும் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செலுத்திவிட்டால், இந்த வருடாந்திர வட்டி விகிதம் பொருந்தாது. மேலும் எந்த வட்டியையும் செலுத்த தேவையில்லை.
கிரெடிட் கார்டுகளில் , சில்வர் கார்டு, கோல்டு கார்டு, பிளாட்டினம் கார்டு, டைட்டானியம் கார்டு என ஒவ்வொரு வங்கியிலும் பல வகையான கிரெடிட் கார்டுகள் உண்டு.
வங்கிகளில் கிரெடிட் கார்டு: விண்ணப்பதாரர், மாதச்சம்பளம் பெறுபவர் எனில், ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் ரூ.1,80,000 இருக்கவேண்டும். இந்த வரம்பு, நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். சில நிறுவனங்கள் இந்த வரம்பை ரூ.2,00,000 – 2,40,000 என நிர்ணயித்துள்ளன.
விண்ணப்பதாரர் சொந்தமாக தொழில் செய்பவர் எனில், ரூ.1,50,000 வரை வருமானம் இருந்தால்கூட சில நிறுவனங்கள் கிரெடிட் கார்டு தருகின்றன. ஆனால், வாடிக்கையாளரின் ஆண்டு வருமானம் அதிகரிக்க அதிகரிக்க கடன் பெறும் தகுதியும் அதிகரிக்கும். அதற்கேற்ப அதிக கடன் வரம்பு கொண்ட கிரெடிட் கார்டுகள் பெற தகுதி உடையவராவார்.
மேலும் குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு. அதிகபட்சமாக 70 வயது வரை அனுமதிக்கப்படும். இதிலும், நிறுவனத்துக்கு ஏற்ப வித்தியாசங்கள் உண்டு. சில நிறுவனங்கள் 60 வயது வரை மட்டுமே கிரெடிட் கார்டு தருகின்றன.
கிரேடிட் கார்டுகளை பொறுத்தவரையில் எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கிகள் பொதுமக்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.