Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய ஆக்ஸிஸ், கனரா வங்கி: புதிய விகிதத்தை செக் பண்ணுங்க

ஆக்ஸிஸ் மற்றும் கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The Latest Fixed Deposit Interest Rates

வங்கிகளின் FD வட்டி விகிதங்கள் தொகை மற்றும் காலத்தைப் பொறுத்து மாறுபடும்.

ஆக்சிஸ் வங்கி மற்றும் கனரா வங்கி ₹2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக 6.5 சதவீதமாக தொடர்வதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisment

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதமாகும். இந்த முடிவை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் ஆக.10ஆம் தேதி அறிவித்தார்.

ஆக்ஸிஸ் வங்கி எஃப்.டி வட்டி விகிதம்

வங்கியின் இணையதளத்தின்படி, புதிய விகிதங்கள் ஆகஸ்ட் 14, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்தத் திருத்தத்தைத் தொடர்ந்து, பொது மக்களுக்கு ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வங்கி 3.5% முதல் 7.3% வரையிலான வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன.

மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகைகளுக்கு 3.50% முதல் 8.05% வரை வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.

அதன்படி 16 மாதங்கள் முதல் 17 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வங்கி 7.30 சதவீதம் வட்டி வழங்குகிறது.

தொடர்ந்து, 2 ஆண்டுகள் மேற்பட்ட முதலீட்டுக்கு 7.20 சதவீதமும், 3 முதல் 5 ஆண்டுகள், அதற்கு மேற்பட்ட முதலீட்டுக்கு 7 சதவீதமும் வட்டி வழங்கும்.

கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்

வங்கியின் இணையதளத்தின்படி, புதிய விகிதங்கள் ஆகஸ்ட் 12, 2023 முதல் அமலுக்கு வருகின்றன.

இந்தத் திருத்தத்தைத் தொடர்ந்து, பொது மக்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4% முதல் 7.25% வரையிலான வட்டி விகிதங்களை வங்கி வழங்கும்.

மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகைகளுக்கு 4% முதல் 7.75% வரை வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். நீண்ட கால முதலீடுகளாக 5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்கு உள்பட்ட எஃப்.டி முதலீட்டுக்கு வங்கி 6.70 சதவீதம் வட்டியை வழங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Axis Bank Canara Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment