முக்கிய வங்கி ஷாக்: ரூ15,000 மினிமம் பேலன்ஸ் இல்லைனா அபராதம் எவ்வளவு தெரியுமா?

பிரீமியம், ஊழியர்கள், ஓய்வூதியம், சிறிய மற்றும் அடிப்படைக் கணக்குகள் கொண்டோருக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் அலெர்ட்களுக்கு கட்டணம் இல்லை.

Pension Scheme

Axis bank minimum account balance : மினிமம் பேலண்ஸை பராமரிப்பதில் பலரும் சுணக்கம் காட்டி வருவதால், மே 1ம் தேதி முதல் ஆக்ஸிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் ரூ. 15000 தங்களின் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெறும் ரூ. 10 ஆயிரம் மட்டும் மினிமம் பேலன்ஸாக இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. அதே போன்று ப்ரைம் மற்றும் லிபெர்ட்டி வகை வங்கி கணக்குகளை வைத்திருக்கும் நபர்களின் மினிமம் பேலன்ஸும் ரூ. 25, 000 மாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை சரியாக பின்பற்றவில்லை என்றால் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூ.10 அபராதமாக பிடிக்கப்படும். இந்த குறைபட்ச அளவு ரூ. 50 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ. 150 என்ற அளவில் இருந்தது. அதிகபட்சமாக ரூ. 800 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதியையும் கொண்டுள்ளது. இதற்கு முன்பு ரூ 600 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது. உங்களின் வங்கிக் கணக்கில் ரூ. 5000 முதல் ரூ. 7500 வரை இருந்தால் உங்களுக்கு அபராதமாக ரூ.800 பிடிக்கப்படும்.

எச்.டி.எஃப்.சி. மற்றும் கோடாக் மஹிந்திரா போன்ற வங்கிகளில் விதிக்கப்படும் அபராதங்களைக் காட்டிலும் இது மிகவும் அதிகமானது. இரண்டு வங்கிகளிலும் குறைந்தபட்சம ரூ. 10 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும்.

பணம் எடுத்தலுக்கான கட்டணம்

ஆக்ஸிஸ் வங்கியில் நான்கு முறை இலவசமாக அல்லது மாதம் ரூ. 2 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் சென்றால் ஒவ்வொரு ரூ. 1000க்கும் ரூ. 5-ஐ கட்டணமாக பெறும்.

ஆனால் எச்.டி.எஃப்.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளில் ஒவ்வொரு முறை இலவச அனுமதிகளை தாண்டி பணம் எடுக்கும் போது வெறும் ரூ. 5 மட்டுமே கட்டணமாக பெறுகிறார்கள். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை எடுப்பதால் வங்கிகளுக்கு செலவு அதிகரிக்கிறது. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவே இது போன்று திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

தொலைதொடர்பு கட்டுப்பாட்டாளரின் சமீபத்திய மாற்றம் காரணமாக, ஆக்சிஸ் வங்கி தனது எஸ்எம்எஸ் கட்டணங்களையும் மறுபரிசீலனை செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 5 ரூபாய் கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, இப்போது ஒவ்வொரு எஸ்எம்எஸ் அலெர்ட்டிற்கும் 25 பைசா கட்டணத்தை வசூலிக்க உள்ளது. அதிகபட்சமாக ரூ. 25 வரை ஒரு மாதம் வசூலிக்கலாம். , ஜூலை 1 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. பிரீமியம், ஊழியர்கள், ஓய்வூதியம், சிறிய மற்றும் அடிப்படைக் கணக்குகள் கொண்டோருக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் அலெர்ட்களுக்கு கட்டணம் இல்லை.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Axis bank minimum account balance withdrawal sms charges

Next Story
கொரோனா பயம், பதற்றம்.. மக்கள் கைகளில் பணப்புழக்கம்!Covid fear and anxiety spread cash back in favour with public Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com