axis bank minimum balance : எந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய கவலை மினிமம் பேலன்ஸ் பற்றிதான். நமக்கு கிடைக்கும் பணத்தை வங்கியில் சேர்த்து வைத்து அதை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் அடிப்படை மக்களுக்கு மினிமம் பேலன்ஸ் என்பது மிகப்பெரிய பிரச்சனை.
வங்கி குறிப்பிடும் தொகையை வாடிக்கையாளர்கள் மினிமல் பேலன்ஸாக அக்கவுண்டில் வைத்திருக்க வேண்டும். அபபடி இல்லையென்றால் வங்கி விதித்துள்ள கட்டணத்தொகையை செலுத்த வேண்டும். வங்கி சொல்லும் அபராதத்தை கண்ணை மூட்டிக் கொண்டு கட்டும் வழக்கத்தை விடுங்கள்.
நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியில் எவ்வளவு அபராதத் தொகையை வங்கி உங்களிடம் வசூலிக்கிறது என்ற முழுமையான தகவலை தெரிந்துக் கொள்ளுங்கள்.
இந்த 3 வங்கிகளில் நெட் பேங்கிங் சேவையை பயன்படுத்தினால் இதுதான் அபராதம்!
ஆக்சிஸ் வங்கி:
ஆக்சிஸ் வங்கியை பொருத்தவரையில் குறைந்தது 10,000 ரூ மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ரூ. 100 முதல் 500 வரை அபராதம் வசூலிக்கப்படும். இந்த தொகையுடன் ஜிஎஸ்டி -யும் அடக்கம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகர வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் குறைந்தது 2,000ரூ வரை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். கிராம வாடிக்கையாளர்கள் 1000 ரூ வரையில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
இதை பின்பற்றாதவர்களுக்கு ரூ. 25 முதல் 250 வரை அபராதத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.