axis bank netbanking axis netbanking : நமது நாட்டில் வங்கிகள் பெரும்பாலான தொழில்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஊன்றுகோலாக அமைகின்றன. இந்த வங்கிகளின் செயல்பாடுகளையும், அதன் பணத்தையும் ஒழுங்குமுறைப்படுத்தி நிர்வகிப்பது நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI).
இந்த ரிசர்வ் வங்கி தான் நாட்டின் தலைமை வங்கியாகவும் செயல்படுகிறது. வங்கிகளுக்கான கட்டுப்பாடுகள், கொள்கைகளில் இவை அதற்கான காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டின் பணவீக்கத்திற்கு ஏற்றாற் போல, வங்கியின் வட்டி விகிதத்திலும் ஏற்ற, இறக்கம் இருக்கும். நீங்கள் வங்கிகளில் பெறும் வீட்டுக்கடனுக்கு சில காலங்களில் வட்டி விகிதம் அதிகரிக்கும்
அல்லது குறைக்கப்படும். நீங்கள் வங்கியில் சேமிக்கும் பணத்திற்கும் அதே முறை தான்.
இதில் எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும், கடன் வாங்கி வேண்டும், ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும், சேலரி அக்கவுண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இருந்த போதும் சில தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சில சலுகைகளை அறிவிப்பது உண்டு. அப்படி ஒரிஉ மிகச் சிறந்த அறிவிப்பு தான் ஆக்சிஸ் வங்கியின் இந்த அறிவிப்பு.
ஆக்ஸில் வங்கி வாடிக்கையாளர்களை மேலும் கவரும் வகையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மினிமம் பேலன்ஸ் தேவையில்லைமாத இருப்புத் தொகையாக மாதம் 25,000 ரூபாய் வைத்திருக்கலாம். அல்லது வங்கியின் டெபிட் கார்டிலேயே ஒவ்வொரு மாதமும் அதே அளவு செலவு செய்யலாம்.
ரூ.20,000 மருத்துவ காப்பீட்டுத் தொகையையும் வங்கி வழங்குகிறது.35 வயதிற்கு உட்பட்ட மாதச் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே இந்த கணக்கை ஓபன் செய்யலாம்.
இது தவிர வார இறுதி நாட்களில் செய்யும் செலவுகளுக்கு கேஷ் பேக், உணவு, பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் பயணம் இவற்றிற்கு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.மாதாந்திர பரிசுக் கூப்பன்களும் உண்டு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil